இந்நிகழ்வினில்.., கலை இயக்குநர் ராஜா பேசியதாவது.. , “இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.” ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் பேசியதாவது.. , “இந்தப் படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி. எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார். ஒரு அழகான, மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் இருந்த நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் பணியை…
Read Moreடோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!
தயாரிப்பாளர் திருமதி பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான திருமதி பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன. திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குத் தமிழில்…
Read Moreசென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி’.
‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட அழகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கால மாற்றங்கள் நம்மையும், நம் சந்ததிகளையும் ஒரு வலிமையான சுழிக்குள் இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. இயல்பான மனிதர்கள் தங்களுக்குள் அன்பும், தேடுதலும் இயந்திரகதிக்குள் ஒளிந்துகொண்டுவிட்டன என்பதைத் தனது எளிய மொழியில் விஜய் ஆம்ஸ்ட்ராங் சொல்லியிருப்பதே ‘வன மடி’ படத்தின் கரு. முற்றிலும் புதியவர்கள் நடித்துள்ள ‘வன மடி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் விஜய் ஆம்ஸ்ட்ராங். அமெரிக்காவில் வசிக்கும் ராலே ராஜன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ராலே ராஜன் அமெரிக்காவில் நமது தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றை இசை வடிவமாக மாற்றும் வேலையைச் செய்து வருகிறார். இவரது இசையில் வன மடி படத்தில் மால்குடி சுபா ஒரு பாடல்…
Read Moreபேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் ARK சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார். சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. படத்தின் இயக்குநர் ARK சரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கிட்டத்தட்ட…
Read Moreபெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் ‘பௌமா’ மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ (Bethlehem Kudumba Unit) திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி விநியோக நிறுவனமான ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தனது அடுத்த முக்கிய திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. அட்வஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டரி-த்ரில்லர் திரைப்படமான ‘பௌமா’ (Bouma) மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்-க்ரைம் டிராமா திரைப்படமான ‘டூக்ஸ்’ (Deux) ஆகிய இரண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் மலையாளத் திரைப்படங்களின் தென்னிந்திய திரையரங்கு விநியோக உரிமையை இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. ஃபியூச்சர் ரன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அனூப் குமார் மற்றும் அருண் நாராயணன் ஆகியோர், உள்ளடக்கத்திற்கு (Content-oriented) முக்கியத்துவம் அளிக்கும் தரமான திரைப்படங்களை பெருந்திரைக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களது நோக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து தென்னிந்தியப் பகுதிகள் மற்றும் பான்-இந்தியா (Pan-India) அளவிலும் விரிவடைவதை இலக்காகக்…
Read More’RX’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்திற்கும், வலுவான கதைக்களங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழித்திரைப்படங்களையும் மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது.…
Read Moreஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் ‘ஆர்.எக்ஸ் – RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு
இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர் எக்ஸ் – RX’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஆர். எக்ஸ் – RX’ . இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் கதையை ஹரிஹரன் ராஜு எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷாம் அப்துல் வஹாப்…
Read More100 கோடி வானவில் – விமர்சனம்
கதை…. கோவாவில் ஒரு டிவி சேனலில் பணிபுரிகிறார் ஹரிஷ் கல்யாண்… ஒரு நிகழ்ச்சிக்காக நாயகி சித்தி இதானியை நிகழ்ச்சி தொகுப்பாளராக கேட்கிறார்.. முதலில் மறுக்கும் சித்தி… ஒரு கட்டத்தில் தன் காதலனுக்காக சிகிச்சைக்காக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் பணம் கிடைக்கும் என்று ஓகே சொல்கிறார்.. நாட்கள் செல்ல செல்ல சித்தி அழகின் மீது காதல் கொண்டு அவரை காதலிக்கிறார் ஹரிஷ்.. தன் காதலை சொல்கிறார்.. ஆனால் தனக்கு காதலன் இருப்பதை சித்தி சொல்ல என்ன செய்த ஹரிஷ் கல்யாண்.? என்பதெல்லாம் மீதி திரைக்கதை நடிகர்கள் ஒரு முக்கோண காதல் கதை… தன் காதலிக்கு இன்னொரு காதலன் இருப்பதை அறியும் காதலன் என்ன செய்வான் என்பதை தவிக்கும் மனநிலையில் அழகாக சித்தரித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.. அழகு கொஞ்சம் நடிப்பு என ரசிகர்களை…
Read Moreசர்வதேச அரசியல் பேசுகிறது… “சிவப்பு நட்சத்திரம்”
பணத்தை பதுக்குவதால் இயற்கை வளங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்படுகின்றன… தானியங்களை பதுக்குவதால் செயற்கையாக பஞ்சங்கள் உருவாகின்றன.. இதற்கான சட்டங்களும் திட்டங்களும் அயல்நாடுகளில் உள்ள தீவுகளில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற சர்வதேச அரசியலை, எந்தவித சமரசமும் இன்றி, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அலசுகிறது இந்த ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம். புதுமுகங்களை வைத்து துணிச்சலாக பேசுகிறது. பொதுவுடமை அரசியல் தலைவனாக, ஆசானாக பொன்வண்ணன் நடிக்கிறார். கதையின் நாயகனாக டல்ஹௌசி பிரபு, கதை நாயகியாக வர்ஷா மற்றும் முன்னணி நடிகர்கள் ஓஏகே சுந்தர், பழ கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவு பி.கே, இசை டி.சி, ஸ்டண்ட் கனல் கண்ணன், எடிட்டிங் செந்தில் வீரா, நடனம் தினேஷ் மாஸ்டர், பாடல்கள் ஞானக்கரவேல், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு கர்ணா,…
Read Moreகமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!
சென்னை, 7 நவம்பர் 2026: திரு. கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சிறப்புமிக்க நாளில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முன்னதாக, நேற்று (நவம்பர் 6) தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பான ‘சண்டியர்’ என்பதை வெளியிட்டனர். இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்தப் படத்துக்கான கமல்ஹாசனின் Look Test புகைப்படங்கள் பெரியளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 7)படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ‘சண்டியர்’ தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. தனித்துவமான கதைசொல்லல் முறைக்கு பெயர் பெற்ற இயக்குனர் எஸ்.யு. அருண் குமார், தலைமுறைகளைக் கடந்து சினிமாத் துறையில் தனது பன்முகத்தன்மை, கலைத் திறன் மற்றும் புதுமைகளுக்காகக் கொண்டாடப்படும்…
Read More