That Day I Did Not Brush — குழந்தையின் நிர்ப்பாவமான பார்வையில் சொல்லப்படும் துயரத்தின் ஒரு மென்மையான படம்.

அன்பும் நுட்பமும் கலந்த இந்த படம், ஒரு சிறுவன் இல்லாமையை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை பெரிய சோக வெளிப்பாடுகளால் அல்ல… சிறிய தருணங்கள், அமைதியான கவனிப்புகள், மற்றும் அவன் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மெதுவான மாற்றங்கள் வழியாக சொல்லுகிறது. இழப்பை நெருக்கமாகவும் மென்மையாகவும் பார்க்கும் இந்த படம், எவ்வளவு சாதாரணமான பழக்கங்களுக்குள்ளும் ஆழமான உணர்வுகள் மறைந்து கிடக்கலாம் என்பதை நினைவூட்டுகிறது. மிக குறைந்த கதை சொல்லலும் அமைதியான காட்சித் தேர்வுகளும் மூலம், நாம் தினமும் கவனிக்காமல் கடந்து செல்லும் விஷயங்களை — தயக்கம், அமைதி, மனத்தின் நுண்ணிய அலைச்சல்கள் — ஒரு நிமிடம் நின்று கவனிக்க இந்த படம் அழைக்கிறது. இந்த குறும்படம் Haiku Kadhaigal தொடரின் ஒரு பகுதி. எழுத்தாளர்-இயக்குநர் பிரியதர்ஷினி ஸ்ரீதரன் அவர்கள் Huggaheim Pictures மூலம் மனிதர்களின் நெருக்கமான உணர்வுகளை ஆராயும்…

Read More

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளம்: ‘பொன்னியின்…

Read More

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் கமல்ஹாசன் வழங்கும் சிவகார்த்திகேயனின் “சேயோன்”

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது. நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக “சேயோன்” அமையும். அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து…

Read More

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல்…

Read More

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா SDG Impact Award – விருதை வழங்கி கௌரவித்தார். இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்தில் ( United Nations Conference Centre, Bangkok) நடைபெற்றது. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்…

Read More

COUPLE FRIENDLY – விமர்சனம்

  கதை… நாயகன் – சந்தோஷ் சோபன்.. நாயகி – மானசா சென்னைக்கு வேலை தேடி வரும் நாயகன் சரியான வேலை கிடைக்காமல் தவிக்கிறார்.. இதேபோல நாயகியும் ஐடி துறையில் பணிபுரிகிறார்.. இருவருக்கும் போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர்.. இவர்களின் நட்பு தொடரும்போது இவரின் வாழ்க்கை தரம் உயர்கிறது.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.. அது என்ன..? அதில் இருந்து மீண்டார்களா.?என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் சந்தோஷ் சோபன்.. எதார்த்த நாயகன்.. அடடா நன்றாக நடிக்கிறாரே என சொல்ல வைக்கிறார் நாயகியாக மானசா வாரணாசி.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. சென்டிமென்ட் காட்சியில் அழ வைக்கிறார்.. யோகி பாபு.. குறைவான காட்சி என்றாலும் வழக்கம் போல டைனிங் காமெடி கொடுத்து கலக்கி இருக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள்……

Read More

DREAM GIRL – விமர்சனம்

கதை… நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா.. இவர்கள் இருவருக்கும் கனவு தேசமான சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்பதே இலட்சியம்.. நாயகனுக்கு இயக்குனராக வேண்டும் என்பது ஆசை.. நாயகிக்கோ திரைப்பட பின்னணி பாடகி ஆக வேண்டும் என்பது ஆசை.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் காதல் மலர்கிறது.. இவர்களின் காதல் வாழ்க்கையில் கனவே பிரச்சனையாக அமைகிறது.. அப்படி என்னதான் அந்த கனவு.. என்ன பிரச்சனை என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா.. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.. இவர்களின் லவ் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.. தொழில்நுட்ப கலைஞர்கள்… இளமாறன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்கின்றன..…

Read More

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!

மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது, “இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது. இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை…

Read More

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை…

Read More

கரியரோட உச்சத்திற்கு சென்றாலும் மக்கள் பணி தான் அவருக்கு முக்கியம்..அரிசி பட விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் P. சண்முகம் – S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும் , விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும்…

Read More