நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்!

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை, இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா,…

Read More

நடிகை கீர்த்தி சுரேஷ் துவங்கி வைத்த “லாங்க்வால்” மால்

 தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா இன்று (03.08.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் துவங்கி வைத்துள்ளார் .விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் : பல வருடங்களுக்கு பிறகு தஞ்சை வந்துள்ளேன், தஞ்சை வந்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. காரணம் தஞ்சை மண் மிகவும் பிரசத்தி பெற்ற கோவில்கள் உள்ள இடம்.இவ்விடத்தில் மிக பிரம்மாண்டமான லாங்வால் மால் அமைத்த VND.இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் மற்றும் இக்குழுமத்தை சார்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தஞ்சை மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி ”தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து” எனும் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகபடுத்தினார்.

Read More

விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘VD 12 ‘எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு தற்போது ‘ VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு…

Read More

மழை பிடிக்காத மனிதன் – விமர்சனம்.. 3/5

கதை… படம் தொடங்கியவுடன் இரண்டு நிமிடங்களில் வரைபடத்துடன் வாய்ஸ் ஓவரில் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். ஒரு அடாத மழையினால் தன் காதல் மனைவி இழக்கிறார் விஜய் ஆண்டனி.. இதனையடுத்து விஜய் ஆண்டனியை எவருக்கும் தெரியாத வகையில் அந்தமானுக்கு கொண்டு செல்கிறார் இவரது நண்பர் சரத்குமார். அதே சமயம் நடந்த சம்பவத்தில் விஜய் ஆண்டனி இறந்து விடுகிறார் என மக்களை நம்ப வைக்கிறார்.. அப்படி அவர் சொல்ல என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ் இல் தெரியும். அந்தமானுக்கு சென்ற விஜய் ஆண்டனி அங்கு ஒரு பிரச்சனையில் தன் நண்பனுக்காகவும் தன் காதலிக்காகவும் களம் இறங்குகிறார்.. அடுத்தது நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகனாக விஜய் ஆண்டனி.. சமீப காலமாக ரோமியோ உள்ளிட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக மாறி இருந்தார் விஜய் ஆண்டனி.. ஆனால்…

Read More

பேச்சி விமர்சனம்: 4/5… நரபலி

கதை… நாயகன் தேவ்.. நாயகி காயத்ரி.. மலைப்பகுதிகளில் ட்ரக்கிங் செல்ல ஆசைப்படும் இரண்டு காதல் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு செல்கின்றனர்.. இவர்கள் கூடவே இவர்களின் போட்டோகிராப் நண்பரும் இணைந்து கொள்கிறார்.. இவர்களுக்கு வழி துணையாக டூரிஸ்ட் கைட் பால சரவணன் இணைகிறார்.. அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகையை காண்கின்றனர்.. அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற அறிந்து கொள்ள காயத்ரி திட்டமிடுகிறார்.. இது எங்கள் கிராமம் இந்த காடு பற்றி நன்கு அறிந்தவன் நான்.. அங்கு ஒரு மர்மம் இருக்கிறது.. அங்கு செல்லக்கூடாது சென்றால் நமக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பாலசரவணன்.. ஆனாலும் அவரின் எதிர்ப்பை மீறி அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். அந்த பகுதியில் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர்.. தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பது…

Read More

‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது!

மார்வெல் ஸ்டுடியோஸின் எபிக் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ. 113 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் திரையரங்குகளில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Read More

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்!!

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியும் சமயச் சொற்பொழிவாளருமான விசாகா ஹரி பொற்கிழி பெறுகிறார். கவிஞர் வைரமுத்து வாழ்க்கைக் குறிப்பு: பழைய மதுரை மாவட்டமாய் விளங்கிய இன்றைய தேனி மாவட்டத்தில் வைகை அணையை ஒட்டியுள்ள மெட்டூரில் 1953ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர்; தாயார் அங்கம்மாள். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை வடுகபட்டியில் முடித்த வைரமுத்து…

Read More

நண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்

 கதை… ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் தன் சிறு வயது முதலே வளர்ந்து வருகிறார் நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் வசிக்கும் பல நண்பர்கள் இவருடேனே அதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்கின்றனர்.. கல்லூரி செல்லும் போது கூட இவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் இணைந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்குகின்றனர். மேலும் BECOME A STAR என்ற மொபைல் ஆப் ஒன்றையும் தொடங்குகின்றனர். ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல வருமானம் இல்லாததால் நண்பர்கள் பிரிந்து செல்கின்றனர்.. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நாயகன் NOVP என்ற நிறுவனத்தை நம்பியே இருக்கிறார்.. இதனால் நாயகியும் அவரை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன்…

Read More

‘மலைவாழ் மக்கள் கீதம்’ : ‘கெவி’ படத்திற்காக எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து

  கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேனிசை தென்றல் தேவாவின் குரலில் ‘கெவி’ படத்திற்காக உருவாகியுள்ள ‘மலைவாழ் மக்கள் கீதம்’ ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தை சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். படத்தின் முக்கியமான காட்சியில், கதைக்களத்தில் வசிக்கும் மக்களின்…

Read More

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

 கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Read More