’RX’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்திற்கும், வலுவான கதைக்களங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழித்திரைப்படங்களையும் மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது.…

Read More

ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் ‘ஆர்.எக்ஸ் – RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர் எக்ஸ் – RX’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஆர். எக்ஸ் – RX’ . இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் கதையை ஹரிஹரன் ராஜு எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷாம் அப்துல் வஹாப்…

Read More

100 கோடி வானவில் – விமர்சனம்

  கதை…. கோவாவில் ஒரு டிவி சேனலில் பணிபுரிகிறார் ஹரிஷ் கல்யாண்… ஒரு நிகழ்ச்சிக்காக நாயகி சித்தி இதானியை நிகழ்ச்சி தொகுப்பாளராக கேட்கிறார்..   முதலில் மறுக்கும் சித்தி… ஒரு கட்டத்தில் தன் காதலனுக்காக சிகிச்சைக்காக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் பணம் கிடைக்கும் என்று ஓகே சொல்கிறார்.. நாட்கள் செல்ல செல்ல சித்தி அழகின் மீது காதல் கொண்டு அவரை காதலிக்கிறார் ஹரிஷ்.. தன் காதலை சொல்கிறார்.. ஆனால் தனக்கு காதலன் இருப்பதை சித்தி சொல்ல என்ன செய்த ஹரிஷ் கல்யாண்.? என்பதெல்லாம் மீதி திரைக்கதை நடிகர்கள் ஒரு முக்கோண காதல் கதை… தன் காதலிக்கு இன்னொரு காதலன் இருப்பதை அறியும் காதலன் என்ன செய்வான் என்பதை தவிக்கும் மனநிலையில் அழகாக சித்தரித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்..     அழகு கொஞ்சம் நடிப்பு என ரசிகர்களை…

Read More

சர்வதேச அரசியல் பேசுகிறது… “சிவப்பு நட்சத்திரம்”

பணத்தை பதுக்குவதால் இயற்கை வளங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்படுகின்றன… தானியங்களை பதுக்குவதால் செயற்கையாக பஞ்சங்கள் உருவாகின்றன.. இதற்கான சட்டங்களும் திட்டங்களும் அயல்நாடுகளில் உள்ள தீவுகளில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற சர்வதேச அரசியலை, எந்தவித சமரசமும் இன்றி, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அலசுகிறது இந்த ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம். புதுமுகங்களை வைத்து துணிச்சலாக பேசுகிறது.  பொதுவுடமை அரசியல் தலைவனாக, ஆசானாக பொன்வண்ணன் நடிக்கிறார். கதையின் நாயகனாக டல்ஹௌசி பிரபு, கதை நாயகியாக வர்ஷா மற்றும் முன்னணி நடிகர்கள் ஓஏகே சுந்தர், பழ கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவு பி.கே, இசை டி.சி, ஸ்டண்ட் கனல் கண்ணன், எடிட்டிங் செந்தில் வீரா, நடனம் தினேஷ் மாஸ்டர், பாடல்கள் ஞானக்கரவேல், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு கர்ணா,…

Read More

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

சென்னை, 7 நவம்பர் 2026: திரு. கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சிறப்புமிக்க நாளில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முன்னதாக, நேற்று (நவம்பர் 6) தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பான ‘சண்டியர்’ என்பதை வெளியிட்டனர். இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்தப் படத்துக்கான கமல்ஹாசனின் Look Test புகைப்படங்கள் பெரியளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 7)படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ‘சண்டியர்’ தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. தனித்துவமான கதைசொல்லல் முறைக்கு பெயர் பெற்ற இயக்குனர் எஸ்.யு. அருண் குமார், தலைமுறைகளைக் கடந்து சினிமாத் துறையில் தனது பன்முகத்தன்மை, கலைத் திறன் மற்றும் புதுமைகளுக்காகக் கொண்டாடப்படும்…

Read More

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது மஸ்காரா, மக்காயலா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் பிரியன் நடிப்பில் ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘வெகுளி’ (VEGULI) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, மிரட்டலான புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பாடலாசிரியர் பிரியன் நடித்த ‘அரணம்’ திரைப்படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்துள்ளது. வேதா பிலிம்ஸ் சார்பில் விஜயா சரவணன் (VIJAYA SHARAVANAN) இணை தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் இசாக் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன்,…

Read More

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்திருக்கிறார். ஜாம்பி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி…

Read More

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஜே.டி. சக்கரவர்த்தி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘BANG’ விரைவில் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

எஸ்.எஸ். சமீர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தனது ஸ்டைலான நடிப்பு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஜே.டி. சக்கரவர்த்தியும் தனது தனித்துவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். இருவரும் இணைந்து திரையில் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அமைந்துள்ளது. குட்டி ராதிகா, அர்ச்சனா கௌதம், சோனி சரிஷ்டா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராம் ஜெகன், கே. விஸ்வநாத், அசோக் குமார், ஆபித் பூஷண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை, பெங்களூரு மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் விலை உயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்க்கின்றன. DSR Films, Mobeen Production மற்றும் SAMEER Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில்…

Read More

இராமாயணம் விமர்சனம் 4.75/5

அரசன் தசரதன் தன் மனைவிகளில் ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற ராமனுக்கு முடிசூடாமல் பரதனை மன்னனாக முடிசூடும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை அடுத்து பரதனின் தாய் ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் இருக்க சொல்கிறார்.. எனவே ராமன் உடன் அவரது மனைவி சீதா மற்றும் ராமனின் சகோதரன் லட்சுமணனும் வனவாசம் செல்கின்றனர்… அவர்கள் அங்கு சந்தித்த இன்னல்கள் என்ன என்பதை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் கதையை திரைக்கதையாக மிக பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் கொடுத்துள்ளனர்.. 3டி முறையில் ரசிகர்கள் கண்டு மகிழும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.. ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.. நடிகர்கள்…. ராமன் கேரக்டரில் ரன்வீர் கபூர்… சீதை கேரக்டரில் சாய் பல்லவி… ராவணன் கேரக்டரில் யஸ்…

Read More

சீன் விமர்சனம் 4.5/5.. சூர்யாவின் அதிரடி பெர்பார்மன்ஸ்

சைபர் கிரைம் போலீசில் வேலை பார்க்கிறார் சூர்யா… ஒரு கட்டத்தில் இவருக்கு கண் பார்வை மெல்ல மெல்ல குறைந்து வரவே வேலையை விட நினைக்கிறார்… ஆனால் தன் கண் பார்வை தான் காரணம் என்று தெரியக்கூடாது என பல பிரச்சினைகளை தான் பணிபுரியும் துறைக்கே கொடுக்கிறார்.. ஆனாலும் இவரின் திறமையால் இவரை வேலையில் விட்டு பணி நீக்கம் செய்யாமல் இருக்கிறார் லால்… ஒரு கட்டத்தில் இவர் சிறை பிடித்த சைக்கோ கில்லர் பாணியில் மீண்டும் வெளியில் கொலைகள் நடக்கிறது… அப்படி என்றால் அந்த கொலைகாரன் யார் என்பதை தேட நினைக்கிறார். ஆனால் இவரின் கண் பார்வை முழுவதுமாக மறைந்து விட்ட நிலையில் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தாரா சூர்யா.? என்பதெல்லாம் வித்தியாசமான கதை.. நடிகர்கள்… மாஸ் காட்டி மிரட்டும் ஹீரோக்கள் மத்தியில் கதைக்கு என்ன தேவையே அதை உணர்ந்து…

Read More