டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது. ‘ரூஹ்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி திரையுலகின் மறக்க முடியாத பல ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் இவ்வகைத் திரைப்படத்தில் நடிக்கிறார். காதல், பிரிவு மற்றும் ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளை…

Read More

திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில் ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம்!

நடுவன் பட இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் ஆல்பம், ஒரு அழகான காதல் கதையைத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன் ரசிகர்களுக்குக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது. இன்டி மியூசிக் தளத்தில் முதல் முறையாக, ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த இருமொழி காதல் இசைப் பயணம், தமிழில் ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் வெளியாகியுள்ளது. Saregama Music நிறுவனம் மூலம் வெளியாகியுள்ள இந்த ஆல்பம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் காதலின் அழகையும் பயணத்தின் அனுபவங்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ‘நடுவன்’…

Read More

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் “ வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.…

Read More

ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் அனிமேஷன் திரைப்படம்! ஆகஸ்ட் 2027-இல் உலகம் முழுவதும் வெளியிடும் இஸ்கான்

ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்! ஆகஸ்ட் 2027-இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு இந்திய திரையுலகில் ‘KGF’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படங்களை வழங்கி, தனித்துவமான கதைகளுக்கும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது ஆன்மிகமும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் ஒரு புதிய திரைப்பட பயணத்தை முன்னெடுத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் இணைந்து, இஸ்கான் (ISKCON) அமைப்பின் நிறுவனர் ஆச்சார்யரான அவரது தெய்வீக அருள் ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் அசாதாரண வாழ்க்கை, ஆன்மிக பயணம் மற்றும் உலகளாவிய சேவையை போற்றும் வகையில் ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARANAGATI – The Life of a Surrendered Soul)** என்ற பிரம்மாண்ட…

Read More

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் டத்தோ மாலிக் வழங்கும்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பிரம்மாண்டமான ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி!

மாலிக் ஸ்ட்ரீம்ஸின் டத்தோ மாலிக், இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானுடன் முதன்முறையாக இணைந்து நடத்தும் இந்த பிரம்மாண்டமான அரங்க இசை நிகழ்ச்சியில், 90% தமிழ் பாடல்களும், அவரது மிகப்பெரிய வெற்றிப் பாடல்களில் 10% இந்திப் பாடல்களும் இடம்பெறவுள்ளன! இசை, மெட்டுகள் மற்றும் உணர்வுகளின் அசாதாரண கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள். புகழ்பெற்ற இசையமைப்பாளரும் உலகளாவிய இசை அடையாளமாகத் திகழ்பவருமான ஏ.ஆர். ரஹ்மான், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சியை 2027 ஜூன் 12 அன்று கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற டிஎம் ஸ்டேடியம் நேஷனலில் நடத்தவுள்ளார். மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி, இசை மேதையின் புகழ்பெற்ற இசைப் பயணத்தைக் கொண்டாடும் பிரம்மாண்டமான விழாவாக ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்களை ஒன்றிணைக்க உள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸின் முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த நிகழ்வு ஏ.ஆர். ரஹ்மானுடன்…

Read More

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருண்ட பின்னணியில் மர்மமான கட்டிடத்தின் சூழலில், அச்சத்துடன் மேலே நோக்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ள போஸ்டர் படத்தின் ஹாரர் பின்னணியையும், கதையில் நிறைந்திருக்கும் மர்மத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சியமைப்பும், கதாபாத்திரங்களின்…

Read More

நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் – (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் – Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி…

Read More

நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

‘கிங் 100 – King 100’ திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இது அவரது மூன்றாவது திரைப்படமாகும். இப்படத்தில் திறமையான நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ‘கிங் 100 – King 100’ படக்குழுவினர், இப்படத்தில் ‘கர்ணா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் அவர் ஒரு விதமான தீவிரமான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் காட்சி தருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அசோக்…

Read More

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிகழ்வினில்.., கலை இயக்குநர் ராஜா பேசியதாவது.. , “இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.” ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் பேசியதாவது.. , “இந்தப் படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி. எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார். ஒரு அழகான, மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் இருந்த நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் பணியை…

Read More

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!

தயாரிப்பாளர் திருமதி பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான திருமதி பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால்  (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன. திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குத் தமிழில்…

Read More