’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள்…

Read More

MAA தலைவர் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷ்ணு மஞ்சு, தெலுங்கு திரையுலக நடிகர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (Movie Artists Association – MAA)-ன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி விஷ்ணு மஞ்சுவின் மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, MAA சங்கத்தில் உள்ள ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு, நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு தேவையான ஆதரவையும், கவனிப்பையும் உறுதி செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், விஷ்ணுவின் தொலைநோக்கு தலைமையின் கீழ் MAA சங்கம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. எதிர்காலத்திற்கான அவரது திட்டங்களில் சங்கத்திற்கான பிரத்யேக கட்டிடமும் அடங்கும். அந்த வகையில், விஷ்ணு மஞ்சுவின் இத்தகைய நடவடிக்கைகளும்,…

Read More

  திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..’ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி நன்றி உரையாற்றினார்.…

Read More

‘விடாமுயற்சி’ டெரிஃபிக் வில்லன் ஆரவ்… அறிமுகப்படுத்திய இயக்குநர் மகிழ் திருமேனி

 நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படங்களில் பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் குறிப்பாக வில்லன்களுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருக்க, படக்குழுவினர் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த படத்தில் ஆரவ் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்பது பற்றி இயக்குநர் மகிழ் திருமேனி கூறியிருப்பதாவது, “பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். ‘மைக்கேல்’ கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின்…

Read More

அந்தகன் விமர்சனம் 4.5/5… ராயல்-கன்

 கதை… பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வையற்றவராக நடித்து அதன் மூலம் மக்களிடையே அனுதாபம் பெற்று பணம் சம்பாதித்து லண்டன் சென்று மிகப்பெரிய இசை கலைஞராக வேண்டும் என நினைக்கிறார். இவர் நிஜமாலுமே கண் தெரியாதவர் தானா என்ற சந்தேகம் பிரசாந்த் வீட்டில் அருகே வசிக்கும் பூவையார் & பிரசாந்த் காதலிக்கும் பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த திறமையான கலைஞர் நிஜமாகவே கண் பார்வையற்றவர் என நினைத்து நவரச நாயகன் நடிகர் கார்த்திக் (கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.) நாளை எனது திருமண நாள்.. எனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக நீங்கள் வந்து எனது ஹிட்டான பாடல்களை பியானோ மூலம் வாசித்து காட்ட வேண்டும் என அட்வான்ஸ் தொகையும் கொடுக்கிறார். அதன்படி அடுத்த நாள் மதியம்…

Read More

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்!!

 BIGBOSS புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : 1 படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. இன்றும் சில மக்கள் எற்று கோள்ள முடியாத வாழ்வியலை மைய கருவாக கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி, மேலும் பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

Read More

கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் இணைந்த அர்ஜெய் – லிங்கா

 தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும் GANGSTER-FANTASY படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ (Small Fox Studio) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜெய் – லிங்கா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். முன்னதாக தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி – 2, எமன், அன்பறிவு, தேள்,  போன்ற படங்களில் மிரட்டிய அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார். அதுபோல் “சேதுபதி” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிங்கா அதன்பிறகு அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி, உடன்பால் என பல்வேறு படங்களில் மிரட்டிய லிங்கா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார். தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்த அர்ஜெய் மற்றும் லிங்கா…

Read More

  திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் “ல் த கா சை ஆ”

சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறினார்கள்… ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்திருக்கிறார் சதா நாடார்.அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும் எனலாம். படம் பற்றி இயக்குநர் சதா நாடார் பேசும் போது, எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்கு முன்பு ஒரு முன்னோட்டம் போல ஒரு திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். அதுதான் ‘ல்…

Read More

“ரெட் பிளவர்” படத்தின் ஹீரோ விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தனர்

 நடிகர் விஜய் சேதுபதி, வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார். “ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் குறிப்பிடத்தக்க சந்தோசத்தை உருவாக்கியுள்ளது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட ‘ரெட் பிளவர்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் மிகுந்த வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு படத்துக்கு கிடைத்துள்ளது. இவர்களது சந்திப்பின் போது, ‘ரெட் பிளவர்’ படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி கண்டுக்களித்தார். ட்ரைலர் பார்த்து வியப்படைந்த அவர், பட குழுவினரின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காகப் பாராட்டினார். “படம் மிகவும் பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்,…

Read More

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், காவ்யா தாபர் நாயகியாகவும் நடித்துள்ளனர். இன்று, படத்தில் இருந்து பிக் புல் என்ற சிறப்பு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுப்பதில் பெயர் பெற்றவர். இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் ஒருபடி மேலே போய், சஞ்சய் தத்தின் வில்லன் கதாபாத்திரத்திரமான பிக் புல்-க்கு பாடலையும் கொடுத்திருக்கிறார். ’பிக் புல்’ பாடலில் மணி ஷர்மாவின் இசை வைப் & எனர்ஜிட்டிக்காக உள்ளது. இதன் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஹை எனர்ஜியில் கொண்டாட்டமான சூழ்நிலையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்…

Read More