FACEON MEDIYAA (OPC) PVT LTD., நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச ஃபேண்டஸி திரைப்படம் ‘பைசாசி’. எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இளம் நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆத்ரேயா இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.வி.உதயகுமார் மற்றும் சி.கே.முருகன் பாடல்கள் எழுத, ராஜேஷ்குமார் வசனம் எழுதுகிறார். மணிகண்டன் மற்றும் தாமரை நடனக் காட்சிகளை வடிவமைக்க, விஜய் ராஜான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சதிஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் துவக்க விழா 11 ஆம் தேதி, 11 ஆம் மாதம், சரியாக 11:11 மணிக்கு, அதாவது 11.11 : 11:11 mints- ல் சென்னை,…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இதற்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தனர். இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்த முறை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் மனதை வருடும் காதல்…
Read Moreஐரோப்பிய நாடுகளில் திரைப்பட விநியோகத்தில் தடம் பதிக்கும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films)
இந்தியத் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது திரைப்பட விநியோகப் பணிகளை விரிவுபடுத்துகிறது. இதற்காக United Films Europa நிறுவனத்துடன் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டணியின் மூலம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களை ஐரோப்பிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, போலந்து நாட்டில் இருந்து இந்த விநியோகப் பயணம் தொடங்குகிறது. இதன் தொடக்கமாக, தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய பொழுதுபோக்குத் திரைப்படமான ‘ஓம்’ (OM) ஐரோப்பியத் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்தியத் திரைப்படங்களுக்குப் புதிய சர்வதேசச் சந்தைகளை உருவாக்கி, ஐரோப்பிய ரசிகர்களிடம் இந்திய சினிமாவைக் கொண்டு சேர்ப்பதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். இந்திய…
Read More‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருண்ட…
Read Moreடிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!
டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது. ‘ரூஹ்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி திரையுலகின் மறக்க முடியாத பல ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் இவ்வகைத் திரைப்படத்தில் நடிக்கிறார். காதல், பிரிவு மற்றும் ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளை…
Read Moreதிரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில் ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம்!
நடுவன் பட இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் ஆல்பம், ஒரு அழகான காதல் கதையைத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன் ரசிகர்களுக்குக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது. இன்டி மியூசிக் தளத்தில் முதல் முறையாக, ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த இருமொழி காதல் இசைப் பயணம், தமிழில் ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் வெளியாகியுள்ளது. Saregama Music நிறுவனம் மூலம் வெளியாகியுள்ள இந்த ஆல்பம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் காதலின் அழகையும் பயணத்தின் அனுபவங்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ‘நடுவன்’…
Read Moreதமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் “ வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.…
Read Moreஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் அனிமேஷன் திரைப்படம்! ஆகஸ்ட் 2027-இல் உலகம் முழுவதும் வெளியிடும் இஸ்கான்
ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்! ஆகஸ்ட் 2027-இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு இந்திய திரையுலகில் ‘KGF’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படங்களை வழங்கி, தனித்துவமான கதைகளுக்கும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது ஆன்மிகமும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் ஒரு புதிய திரைப்பட பயணத்தை முன்னெடுத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் இணைந்து, இஸ்கான் (ISKCON) அமைப்பின் நிறுவனர் ஆச்சார்யரான அவரது தெய்வீக அருள் ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் அசாதாரண வாழ்க்கை, ஆன்மிக பயணம் மற்றும் உலகளாவிய சேவையை போற்றும் வகையில் ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARANAGATI – The Life of a Surrendered Soul)** என்ற பிரம்மாண்ட…
Read Moreமாலிக் ஸ்ட்ரீம்ஸ் டத்தோ மாலிக் வழங்கும்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பிரம்மாண்டமான ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி!
மாலிக் ஸ்ட்ரீம்ஸின் டத்தோ மாலிக், இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானுடன் முதன்முறையாக இணைந்து நடத்தும் இந்த பிரம்மாண்டமான அரங்க இசை நிகழ்ச்சியில், 90% தமிழ் பாடல்களும், அவரது மிகப்பெரிய வெற்றிப் பாடல்களில் 10% இந்திப் பாடல்களும் இடம்பெறவுள்ளன! இசை, மெட்டுகள் மற்றும் உணர்வுகளின் அசாதாரண கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள். புகழ்பெற்ற இசையமைப்பாளரும் உலகளாவிய இசை அடையாளமாகத் திகழ்பவருமான ஏ.ஆர். ரஹ்மான், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சியை 2027 ஜூன் 12 அன்று கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற டிஎம் ஸ்டேடியம் நேஷனலில் நடத்தவுள்ளார். மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி, இசை மேதையின் புகழ்பெற்ற இசைப் பயணத்தைக் கொண்டாடும் பிரம்மாண்டமான விழாவாக ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்களை ஒன்றிணைக்க உள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸின் முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த நிகழ்வு ஏ.ஆர். ரஹ்மானுடன்…
Read Moreஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.
ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருண்ட பின்னணியில் மர்மமான கட்டிடத்தின் சூழலில், அச்சத்துடன் மேலே நோக்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ள போஸ்டர் படத்தின் ஹாரர் பின்னணியையும், கதையில் நிறைந்திருக்கும் மர்மத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சியமைப்பும், கதாபாத்திரங்களின்…
Read More