வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல்…
Read Moreமின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் 50வது படமான “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!
மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பான் இந்திய படைப்பாக, மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “மின்னல் முரளி” மற்றும் “2018 – எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ” ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுதும் கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸ், அடுத்ததாக பிரம்மாண்டமான “ARM” ஏஆர்எம் எனும் – ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் மூலம் அசத்தவுள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது. மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பிரம்மாண்ட படைப்பாக இப்படம்…
Read Moreஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!
நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை. மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மற்ற நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர்…
Read More‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) – பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிஜிஎஸ், இந்தப் படத்தின் கதை தொடங்கி, திரைக்கதையாக ஒன்றரை ஆண்டுகள் ஆனது, இப்படம்…
Read Moreமக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்!
Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள்…
Read More‘தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்!
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தங்கலான்’. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் சீயான் விக்ரம். இதற்கு முன்…
Read Moreசெம்பியன் மாதேவி – விமர்சனம் 3/5
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கதை… செம்பியன் என்ற கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் நடக்கும் கதை.. நாயகன் வீரா நாயகி மாதேவி.. தன் வீட்டு கோழி பண்ணையில் வேலை பார்க்கும் நபரின் மகளைக் காதலிக்கிறார் நாயகன் வீரா.. நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் அவரின் நல்ல உள்ளம் புரிந்து கொள்ள மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதால் நாயகி கர்ப்பமாகிறாள். இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறால் நாயகி மாதேவி.. ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் நாயகன் வீரா. அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகி என்ன செய்தார்.? உண்மையாக காதலித்த நாயகன் திருமணம்…
Read Moreநடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்!!
நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது… திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்… அவர் கடைசியாக நடித்த படம் “சாலா”, அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் “நீ விக்கற… அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே” இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம் “சார்… இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்… நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல” என சொன்னார்… குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று “கடைய மூடுங்க” என்பதாகத்தான் இருக்கும்… சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த கடைசி நாட்களில்…
Read Moreவெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!
மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெப்பன்’. சயின்ஸ் ஃபிக்ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. இதுகுறித்தான மகிழ்ச்சியை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் பகிர்ந்து கொண்டதாவது, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. தியேட்டர் ஆடியன்ஸ்- ஓடிடி பார்வையாளர்களை என இருதரப்பினரையும் ஒருசேர திருப்திப்படுத்துவது எளிதல்ல! அதை ‘வெப்பன்’ செய்திருக்கிறது என்பதே இதற்கு சான்று”…
Read Moreநடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!
மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Read More