அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை… வான்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்ற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் ஆகியோர் கைகளில் சிக்கியது எப்படி அதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது எப்படி என்பதை சுவையாக சொல்லி இருக்கும் படம். ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்). கேரளாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும், அஜயன் களரியில் செம கில்லாடி.. மேலும் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பிளம்பர் பணிகளையும் செய்து வருகிறார்.. இவரது தாத்தா அந்த ஊரில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து வருகிறது.. தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் இந்தக் குற்றச்சாட்டை அஜயன்…
Read MoreCategory: விமர்சனம்
GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – விமர்சனம் 3.75/5
கதை… விஜய்யின் மனைவி சினேகா.. இவர்களுக்கு ஒரு மகன்.. சினேகா 2வது குழந்தைக்காக கர்ப்பிணியாக காத்திருக்கிறார். பிரசாந்த் மனைவி லைலா.. இவர்களுக்கு ஒரு மகள்.. விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர். ஒரு நாட்டிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதியையும் பிடிக்க SAT squad டீம் களம் இறங்குகிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் தனது 2வது ஹனிமூனுக்காக சினேகா மற்றும் தனது மகனுடன் தாய்லாந்த் செல்கிறார் விஜய்.. அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனை சமயத்தில் தன் மகனை தொலைத்து விடுகிறார்.. இதனை எடுத்து விஜய்யை பிரியும் சினேகா 15 ஆண்டுகளாக தன் மகளை மட்டும் வளர்த்து வருகிறார். அதன் பிறகு…
Read Moreவிருந்து – விமர்சனம் 3.75/5.. ஆக்சன் விருந்து
கதை… படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. கொலைக்கான காரணம் என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கையில் சில தினங்களில் அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இதனால் இவர்களது மகள் நிக்கி கல்ராணி மிகுந்த சோகத்தில் இருக்கிறார்.. தன் பெற்றோரின் கொலைக்கு என்ன காரணம் கொலை செய்தவர்கள் யார் என விசாரணையில் இறங்குகிறார் மகள். அப்போது இவரது சந்தேகம் அர்ஜுன் மீது விழுகிறது.. இதனையடுத்து அர்ஜுனை கொல்ல திட்டமிடுகிறார்.. அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம்..? நிஜமாகவே நிக்கி பெற்றோர்களை அர்ஜுன்தான் கொலை செய்தாரா? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் அர்ஜுன்.. தனக்கு படத்தில் ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் மட்டுமே ஸ்கோர்ஸ் செய்ய முடியும்…
Read Moreசெம்பியன் மாதேவி – விமர்சனம் 3/5
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கதை… செம்பியன் என்ற கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் நடக்கும் கதை.. நாயகன் வீரா நாயகி மாதேவி.. தன் வீட்டு கோழி பண்ணையில் வேலை பார்க்கும் நபரின் மகளைக் காதலிக்கிறார் நாயகன் வீரா.. நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் அவரின் நல்ல உள்ளம் புரிந்து கொள்ள மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதால் நாயகி கர்ப்பமாகிறாள். இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறால் நாயகி மாதேவி.. ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் நாயகன் வீரா. அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகி என்ன செய்தார்.? உண்மையாக காதலித்த நாயகன் திருமணம்…
Read Moreவாழை விமர்சனம் 4.25/5.. வாழை இலை விருந்து
கதை… 1990-களில் நடந்த காலகட்ட கதை இது. பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய தோழர்கள்.. இதில் பொன்வேல் ரஜினி ரசிகன். ராகுல் கமல் ரசிகன்.. இவர்கள் படிக்கும் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் நிகிலா மீது பொன்வேலுக்கு இனம் புரியாத நேசம் ஏற்படுகிறது.. பள்ளி இல்லாத நாட்களில் பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் வாழைத்தார்களை சுமக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். வாழைத்தார்களை சுமப்பது கடினமாக இருப்பதால் ஒரு நாள் காலில் முள் குத்தி விட்டதாக பொய் சொல்லிவிட்டு மாடு மேய்க்க செல்கிறான் பொன்வேல். அப்போது பொன்வேலின் அம்மா மற்றும் அக்கா இருவரும் வாழைத்தாரை சுமக்கும் பணிக்கு செல்கின்றனர். பொன்வேல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக செல்லும் டீச்சர் நிகிலாவுடன் மாவு அரைக்க செல்கிறான்.. மாலையில் பொன்வேல் வந்து திரும்பி…
Read Moreபோகுமிடம் வெகு தூரமில்லை விமர்சனம் 4/5.. உத்தம கலைஞன்
கதை… ஆடுகளம் நரேன் & பவன் இருவரும் அண்ணன் தம்பிகள்.. இருவருக்கும் ஒரே தந்தை என்றாலும் வெவ்வேறு தாய்.. மூத்த தாரத்தின் மகன் நரேன்.. இரண்டாம் தாரத்தின் மகன் பவன்.. எனவே இவர்களுக்கு எப்போது மோதல் இருந்து வருகிறத. இந்த சூழ்நிலையில் இவர்களின் தந்தை சென்னையில் மரணமடைந்து விடுகிறார்.. இதனால் தந்தைக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.. பிணத்தை தங்கள் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்கின்றனர்.. இவர்களின் தந்தை உடலை அமரர் ஊர்தியில் திருநெல்வேலிக்கு எடுத்து வருகிறார் விமல்.. நீ இந்த உடலை ஒழுங்காக கொண்டு சேர்த்தால் நீ கேட்ட பணத்தை தருகிறேன் என முதலாளி சொல்லவே வேறு வழியின்றி மனைவியின் பிரசவத்திற்கு கூட அருகே நிற்காமல் பிணத்தை தனியாக எடுத்து செல்கிறார் விமல். செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர்…
Read Moreசாலா விமர்சனம் 3.5/5.. BAR WAR
கதை… நாயகன் – தீரன்.. நாயகி – ரேஷ்மா.. குடி குடி என்பதுதான் நாயகனின் தாரக மந்திரம்.. குடிக்காதே குடிக்காதே நன்றாக படி என்பது நாயகியின் தந்திரம்.. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்… 23 வருடங்களாக பூட்டிக் கிடக்கும் பார்வதி ஒயின்சுக்கு இரண்டு கோஷ்டிகள் அடித்துக் அடித்துக் கொல்கின்றனர்.. இவர்களின் சண்டையை ஓரமாக நின்று மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம். குடியை ஆதரிக்கும் நாயகன்.. குடியை எதிர்க்கும் நாயகி ஒரு கட்டத்தில் நண்பர்களாகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? யார் திருந்தினார்கள்? என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… ஆறடி உயரம் அதிர வைக்கும் கம்பீரம் நீண்ட தலை முடி நீண்ட தாடி என வில்லன் தோற்றத்தில் நாயகனாக மிரட்டி இருக்கிறார் தீரன்.. ஒரு பார் சண்டைக் காட்சியில் 30…
Read Moreகொட்டுக்காளி – திரை விமர்சனம்
மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனால் மீனாவை அவரது வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துப் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருந்ததா, இல்லையா? இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவது தான் கதை. மொத்தக் கதையையும் பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதி விடலாம்.. அந்த சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல் பாடுகளை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். கிராமங்களில்…
Read Moreவேதா ஹிந்தி திரைப்பட விமர்சனம்…!!
கதை… வடமாநிலத்தில் கீழ் ஜாதியில் பிறந்த நாயகி குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் நினைக்கிறாள். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் இவரது உறவினர்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜான் ஆபிரகாம் உதவியுடன் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் ஷர்வாரி வாக்.. இறுதியில் என்ன ஆனது.? நினைத்ததை சாதித்தாரா ஷர்வாரி வாக்..? ஜான் ஆபிரகாம் எப்படி உதவினார்.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… படம் முழுக்க சீரியஸான தோற்றத்தில் வருகிறார் நாயகன் ஜான் ஆபிரகாம்.. ஆனால் தமன்னாவுடன் நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் புன்னகை பூக்கிறார்.. அதே சமயம் ராணுவத்தில் இருக்கும்போது முறுக்கேரிய உடம்பு கட்டுக்கோப்பான உடலுடன் அசத்தலான தோற்றத்தில் வருகிறார்.. நாயகி ஷர்வாரி வாக்.. இவரது கேரக்டர் பெயர் தான் வேதா.. அதை உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.. தன்னுடைய சிகை…
Read Moreடிமான்டி காலனி 2 விமர்சனம் 3.75/5.. திகில் விருந்து
கதை… டிமான்டி காலனி 2015 ஆம் ஆண்டு வந்தது.. அந்தப் படத்தில் நாயகன் அருள்நிதி இறப்பதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.. அப்படி இருக்கையில் இந்த படம் எப்படி தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருக்கும்.. அதை அழகாகவே திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திகில் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆறு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்த தன் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து அவரது ஆவியுடன் பேச முற்படுகிறார் பிரியா.. முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அப்பா அருண் பாண்டியன் வேறு வழியின்றி மகளுக்காக ஒத்துக் கொள்கிறார்.. அதன்படி ஆவிகளுடன் பேசுவதற்காக ஆவிகள் உலகில் நுழைந்த பிரியா அவர்கள் அருள்நிதி ஆவியை நிஜ உலகிற்கு அழைத்து வருகிறார். நிஜ உலகில் அருள்நிதியின் (இரட்டை பிறவி)…
Read More
