“ வகிபா “ வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு தனி மனிதனின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்!

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி    தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது  வண்ணக்கிளி பாரதி எனும்  பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன்,  கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  –   S.சக்திவேல் இசை   –  முஜிப்ரஹ்மான் வசனம்  – ரா,கண்ணன் பாடல்கள்  –  மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி எடிட்டிங்   –  G.சந்திரகுமார் கலை  –  சாய்மணி நடனம்  – ரமேஷ் சண்டை  – நைப் நரேன் தயாரிப்பு மேற்பார்வை –  சங்கர் நிர்வாக தயாரிப்பு –  ராமு கதை, தயாரிப்பு  –  ஸ்சொப்பன் பிரதான் திரைக்கதை, இயக்கம்  –  இகோர் . இவர்…

Read More

அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும் தெருக்கூத்து நிகழ்ச்சி..!

சென்னையில்  நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில்  வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து  வருபவர் ‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார். மேலும் தமிழ் மன்னர்களின்  வரலாற்றையும் சமகால அரசியலையும்  பேசக்கூடிய கலையாகவும்  மேம்படுத்தி தெருக்கூத்து வடிவில் மக்களிடம் சேர்த்து வருகிறார்.. அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தி இருந்தார்.…

Read More

மோடி எம்.ஏ. படித்துள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி எம்.ஏ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இளங்கலைப் படிப்பை 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும், முதுகலை படிப்பை 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளவர் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 26) தனது வேட்புமனுவை சமர்பித்தார். இந்த நிலையில் மோடி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் ரூ.2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.41 கோடியாகவும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1.1 கோடியாகவும் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளைப் பொறுத்தவரை…

Read More

தேவராட்டம் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

கொம்பன் , மருது உள்ளிட்ட படங்களின் இயக்குனர் முத்தையா இயக்கியத் திரைப்படம் தேவராட்டம். கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க மஞ்சிமா மோகன் ஜோடியாக நடிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்ர். பிரவீன் கே.எல் -வீரமணி ஆகிய இருவரும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாலும் முத்தையா இயக்குவதாலும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1ல் ரிலீஸாகிறது. இதையொட்டி தேவராட்டம் டீம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அந்நிகழ்வில் இயக்குநர் முத்தையா பேசும்போது, “நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம்…

Read More

பூஜையுடன் துவங்கிய ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’

தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான ‘தனுசு ராசி நேயர்களே’வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இன்று காலை எளிய சம்பிரதாய பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.…

Read More

ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR & கௌதம் கார்த்திக்.

இந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே .ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. KGF இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணி புரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார். தனித்துவமான கதைகளை வணிக அம்சங்களை கலந்து மிகச்சிறப்பாக கொடுக்கும் ஒரு அரிய தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அதனாலேயே, இந்த படத்தில் என்னவெல்லாம்…

Read More

சீனாவில் ஆன்லைன் வணிக சேவையை நிறுத்திக்கொள்ளப் போகும் அமேசான்!

உள்நாட்டு போட்டிகளின் காரணமாக சீனாவில் ஆன்லைன் வணிகத்தை அமேசான் நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானுக்கு போட்டியாக சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான அலிபாபா, ஜே.டி.காம் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகின்றன. வர்த்தக ரீதியான போட்டிகள் காரணமாகவும, கடுமையான விதிமுறைகள் காரணமாகவும் 15 வருடங்களாக அந்நாட்டில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான், அதனை வரும் ஜூன் மாதம் 18ம் தேதியோடு நிறுத்திக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அன்று முதல் சீனாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அமேசான் மூலம் வாங்க முடியும். மேலும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் (cross-border) செயல்பாடுகளை சீனாவில் தொடரவும் அமேசான் முடிவு செய்துள்ளது.

Read More

நிதின்சத்யா தயாரிப்பில் முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கும் புதிய படம்!

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா “ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.  சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர்…

Read More

ஆசிய தடகளம்: ததமிழக வீராங்கனை ங்கம் வென்றார் !

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில்…

Read More