அதிமுகவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் வரிந்துகட்டிக் கொண்டு போட்டியில் குதித்துள்ளனர். இந்த நிலையில் பாஜ, பாமக கட்சிகளும் தங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கேட்பதாலும், ஜாதிக்கு ஒரு சீட் வேண்டும் என்று முன்னோடிகள் கேட்பதாலும், அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இதனால், அதிமுக கட்சியில் எடப்பாடி – ஓபிஎஸ் இடையே கடுமையான கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்திற்கான 6…
Read Moreசர்ச்சையைக் கிளப்பிய ட்விட்-டை நீக்கிய முதல்வர் எடப்பாடியார்!
தமிழை மற்ற மாநிலங்களின் 3வது மொழியாக்க வேண்டும் என கூறி பிரதமர் மோடிக்கு போட்ட டிவிட்டை முதல்வர் நீக்கியுள்ளார். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்ளை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கல்வி கொள்கையில் ஹிந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஹிந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3 வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை பிரமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், பிற மாநிலங்களில் தமிழை 3 வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான…
Read Moreஉலக சுற்றுச்சூழல் தினம்!
உலகமெங்கும் வருடா வருடம் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது நாம் வசிக்கும் பூமியின் தேவையை, பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட வாசகத்துடன் ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான சுற்றுச்சூழல் தின வாசகம் ”காற்று மாசுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்” என்பதே. உணவில்லாமல், நீர் இல்லாமல் கூட சில நாட்களுக்கு உயிர் வாழ்ந்துவிட முடியும் .ஆனால் மூச்சு இல்லாமல் உயிர் வாழ முடியுமா? காற்று என்பது தான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை. உயிரினங்களையும் இந்த உலகத்தையும் இயக்கும் காற்று, நாளுக்கு நாள் மாசடைந்து வருவது வருத்தத்துக்கு உரியது. காற்று மாசு என்பது உயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல். அந்த தாக்குதலுக்கு காரணமும் நாம் தான் என்பது மறுப்பதற்கில்லை. காற்று மாசு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் 7…
Read Moreபுதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் ” !
புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயக னாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில் ரவ்னக் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். அண்மையில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.
Read Moreஇயக்குநர் பா.இரஞ்சித்தின் கிராமங்களை நோக்கிய பயணம்!!
கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார். “இந்த இரவு பாட…
Read Moreஜீவனின் அசரீரி!
அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர்…
Read Moreநீட் தேர்வு முடிவுகள் வெளியானது!
நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதியும் ஃபானி புயல், கர்நாடகாவில் ரயில் தாமதம் ஆகிய காரணங்களால் தேர்வெழுத முடியாதவர்களுக்கு 20-ஆம் தேதியும் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in-ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதிய மாணவர்களில் கடந்த ஆண்டு 39 புள்ளி 56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 48 புள்ளி 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு எழுதியவர்களில் 56 புள்ளி 27 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 74 புள்ளி 92 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 701 மதிப்பெண்களுடன்…
Read Moreநடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நாசர் & விஷால் அணி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாசர் தலைமையிலான நிர்வாகக் காலம் முடிவடைந்ததை யடுத்து, 2019 -2022 ஆண்டுகளுக்கான நிர்வாக குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மேலும், ஜூன் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தேர்தல், சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்தத் தேர்தலில் நாசர் – விஷால் அணி மீண்டும் போட்டியிடவுள்ளது.இதற்கான 26 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும்…
Read Moreநான், சலீம், பிச்சைக்காரன் வரிசையில் கொலைகாரன்
விஜய் ஆண்டனி முரட்டுத் தனமான கேரக்டரில், நான், சலீம் படங்கள் இரண்டும் நன்றாக ஓடி கல்லா கட்டி இருக்கிறது. மேலும் பக்கா செண்டிமெண்ட் ஆக நடித்த பிச்சைக்காரன் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி தூள் கிளப்பியது. தற்போது வரும் ஜுன் 7 ஆம் தேதி வெளிவர இருக்கும் கொலைகாரன் படமும் அந்த வரிசையில் சேரும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனென்றால் கொலைகாரன் படத்தில் நான் சலீம் படங்களில் போல் பக்கா திரில்லர் விசயங்களும் இருக்கிறதாம், பிச்சைக்காரன் படத்தைப் போல பக்கா செண்டிமெண்ட் மேட்டரும் இருக்கிறதாம். அதனால் படம் எப்படியும் பட்டயக் கிளப்பும் என்கிறார்கள். காத்திருப்போம்
Read Moreதேவி + 2- விமர்சனம்!
ரொம்ப நாட்களுக்குப் பிறகு சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். குழந்தைகளை கொண்டாட வைக்கும் அளவில் ஒருபடம் வந்துவிட்டால் நிச்சயம் அப்படங்களை குடும்பங்களும் கொண்டாடும். தேவி படத்தில் தமன்னாவை பெண் பேய் வந்து ஆட்டும். தேவி+2-வில் பிரபுதேவாவை இரண்டு ஆண் பேய்கள் வந்து ஆட்டுகின்றன. அந்தப் பேய்களிடம் இருந்து தமன்னா எப்படி கணவனை மீட்டு எடுக்கிறார், பேய்கள் போடும் கான்ட்ராக்ட் என்னாச்சு என்பது தான் 2 மணி நேர தேவியாட்டம். நடிகர் பார்த்திபன் குரலில் தேவி முதல்பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் உள்ள தொடர்போடு கதை துவங்குகிறது. அதனால் முதல் காட்சிக்கு முன்பே நாம் படத்தோடு ஒன்றி விடுகிறோம். மொரீசியஸ்க்கு தமன்னாவோடு செல்லும் பிரபுதேவாவிற்கு அங்கு தான் இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அந்த இரண்டுப் பேய்களுக்கும் உள்ள மோட்டிவேஷன் ஒரு காதல் என்பது தான் கலாட்டா ஏரியா. தமன்னா பிரபுதேவாவின்…
Read More