திரௌபதி2 பட குழுவினர் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

இயக்குநர் மோகன் ஜி, நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுமாறு தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீடு மற்றொரு தேதிக்கு மாற்றப்படுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவித்துள்ளார். புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் நேரில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை சந்தித்து, அவரது ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

பி சி ஸ்ரீராம், ரவிவர்மன், பி லெனின், ஶ்ரீகர் பிரசாத், எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் முன்னிலையில் சென்னையில் ஜனவரி 24 அன்று தொடக்க விழா நடைபெறுகிறது

முன்னணி ஒளிப்பதிவாளரும் உலக சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தியவருமான செழியன், ‘கல்லூரி’ ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக முத்திரை பதித்ததோடு மட்டுமில்லாமல் ‘டூ லெட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளை குவித்தார். எளிமையான கதையை திறமையாக படமாக்கும் அவரது நேர்த்தியை கண்டு வியந்த பலர், திரைப்படம் உருவாக்கும் உத்திகளையும் வித்தைகளையும் ஆர்வமுள்ளவர்களுக்கு அவர் கற்றுத் தர வேண்டும் என்று கோரியதன் விளைவாக ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ என்ற பள்ளியை செழியன் தொடங்கினார். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், வெளிநாட்டவர் என பலரும் இப்பள்ளியில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் எண்பது பேரை தேர்ந்தெடுத்து கதை, திரைக்கதை உருவாக்கம், ஒளிப்பதிவு நுணுக்கங்கள், படத்தொகுப்பு என திரைப்பட உருவாக்கத்தின் அனைத்து துறைகளிலும் செழியன் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ பள்ளியில் கற்றுத் தேர்ந்த மாணவர்கள் திரைப்படங்களை…

Read More

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். ‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப்…

Read More

தில்ராஜு பெருமையுடன் வழங்கும் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் பான் இந்தியா திரைப்படம் ‘யெல்லம்மா’! ‘பலாகம்’ புகழ் வேணு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சிரிஷ் தயாரிக்கிறார்!

வெற்றி கதைகளை தேர்வு செய்வதில் தனிச்சிறப்பு கொண்ட தயாரிப்பாளர் தில்ராஜு, ‘பலாகம்’ புகழ் இயக்குநர் வேணுவின் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான ‘யெல்லம்மா’வை பெருமையுடன் வழங்குகிறார். அறிமுக படத்திலேயே தேசிய விருது பெற்று பாராட்டு பெற்ற வேணு, இந்த முறையும் ஆழமான சக்தி மற்றும் ஆன்மீகத் தன்மை கொண்ட கதையுடன் புதிய படம் இயக்குகிறார். இந்த படத்தை பிரமாண்டமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் சிரிஷ் தயாரிக்கிறார். சினிமாவில் பல ஆண்டுகளாக இசைத்துறையில் தனது இசை மூலம் ரசிகர்களை மகிழ்வித்த ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), இப்போது முதன்முறையாக ஹீரோவாக திரையில் அறிமுகமாகிறார். நீண்ட நாட்களாக பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவரது ஹீரோ அறிமுகம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தனது இயல்புக்கும் எனர்ஜிக்கும் ஏற்ற கதையாக தேர்வு செய்திருக்கிறார். கதாநாயகனாக நடிப்பதுடன்,…

Read More

கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

  கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர இந்த இயக்கம் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. இதன் மூலம், பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாகியுள்ளது. இதுவரை, இந்த…

Read More

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த ‘காட்டாளன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான கொண்டாட்டமாக மாறியது. ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ரசிகர்களும், ஊடகத்தினரும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர். டீசருக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிரடியான ஆக்சன் காட்சிகளால் நிரம்பிய இந்த டீசர்- ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு திரில் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. இதுவரை கண்டிராத வகையில் பிரமிக்கத்தக்க வைக்கும் சண்டை காட்சிகள் இப்படத்தின் தனி சிறப்பாக இருக்கும் என்பதையும் இந்த டீசர் உணர்த்துகிறது. இந்த டீசரில் முன்னணி நடிகர் ஆண்டனி…

Read More

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’ வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் கிளிம்ப்ஸை பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் பிரம்மாண்டமான மாயாஜால காட்சிகள், நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்பதை உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “’மரகத நாணயம் 2’ தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானது. இந்தமுறை உலகளவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்…

Read More

கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத்…

Read More

மகர சங்கராந்தியை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!

மும்பை, 16 ஜனவரி 2026: இந்த மகர சங்கராந்தியை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான தனது தெலுங்கு திரைப்பட பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பெருமையுடன் வெளியிடுகிறது. திரையரங்குகளில் வெளியான பின்னர் நெட்ஃபிலிக்ஸ் மூலம் பார்வையாளர்களை சென்றடைய உள்ள இந்தத் திரைப்படங்கள் பிரமாண்டமான காட்சிகள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களை உள்ளடக்கியது. தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டம், வித்தியாசமான கதைகள் இவை அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் தளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும். கடந்த 2025 ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் மாஸ் என்டர்டெயினர்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் ஆகிய ஜானர்களில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பைப் பெற்றன. ’புஷ்பா2’, ‘ஹிட்3’, ‘தே கால் ஹிம் ஓஜி’ போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களும், ’கோர்ட்: ஸ்டேட் vs அ நோபடி’. ’தி கேர்ள்பிரண்ட்’ போன்ற…

Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33  டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக  “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி.   நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில்…

Read More