‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார். ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், “சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,” என்றார். யோகி பாபு,…
Read Moreநெட்ஃபிலிக்ஸ் தமிழில் வெளியான ‘மேட் இன் கொரியா’ படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது!
மும்பை, மார்ச் 18, 2026: சில திரைப்படங்கள் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதை விட்டு அகலாது. மனதை தொடும் கதையோடு, இருவேறு கலாச்சாரங்களை அழகாக காட்சிப்படுத்திய ‘மேட் இன் கொரியா’ திரைப்படமும் அதுபோன்ற தாக்கத்தைத்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் இயக்கத்தில்,பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான இந்த படம் நெட்ஃப்லிக்ஸின் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மார்ச் 12 அன்று ப்ரீமியர் ஆன ‘மேட் இன் கொரியா’ அதன் கவரும் கதைக்களத்தால் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட…
Read Moreரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருப்பது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். புத்தாண்டு தினத்தில் சஸ்பென்சாக வைக்கப்பட்ட, இரண்டாம் பாகத்தின் மர்மமான ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் இப்போது யார் நடிக்கிறார் என்பது படக்குழு வெளிப்படுத்தியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள…
Read Moreநான்கு நாட்களில் 3.1 மில்லியன் பார்வைகள் – இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை
சென்னை / பார்சிலோனா – சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வெற்றி குறித்து ராலே ராஜன் கூறுகையில், “உலகெங்கிலும்…
Read Moreயுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது
முன்னோடி கலைஞரான அனிருத் ரவிச்சந்தர் திரைப்படங்கள் அல்லாத மற்ற இசை வெளியீடுகளுக்காகத் தொடங்கியுள்ள அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் எனும் புதிய நிறுவனத்தின் பிரத்யேக கூட்டாளராக யுனிவர்சல் மியூசிக் இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய ஒப்பந்தம், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பை வலுப்படுத்துகிறது. மும்பை, 17 மார்ச் 2026 – இசை சார்ந்த பொழுதுபோக்குத் துறையில் உலக முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவான யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் தொடங்கியுள்ள சுயாதீன இசைப் பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) உடன் ஒரு பிரத்யேக கூட்டாண்மை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், அனிருத்…
Read Moreசர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ராஜாதிராஜ் யாத்ரா’ நாடகம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெறுகிறது
‘ராஜாதிராஜ் யாத்ரா’ எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது. திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ராஜாதிராஜ் யாத்ரா’ நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் ரசனைக்கும் விருந்து படைக்கும் வகையில் இந்த நாடகம் திகழும். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29…
Read Moreவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி…
Read Moreகுறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர் – பி.டி.செல்வகுமார்
குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர் என திரைப்பட தயாரிப்பாளரும், மாநில திமுக வர்த்தகர் அணி துணை செயலாளருமான பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; எப்போதுமே அடிக்காத குழந்தையும், முறிக்காத முருங்கையும் உதவாமல் தான் போகும். அதுபோலத்தான் ஆதவ் அர்ஜூனா விஜய்யுடன் வந்து சேரும் போதே எனக்கு தெரியும் விஜய்யும், தவெகவும் உருப்படாது என்பது. படையப்பா, முத்து உள்ளிட்ட படத்தில் நான் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து பணியாற்றும் போதே ரஜினிகாந்த் அவர்களின் மனிதநேயம் குறித்து தெளிவாக தெரிந்து கொண்டேன். ரஜினி அவர்களுடன் பணிபுரிந்த பண்டரிபாய், ஹேமநாத் பாபு, வி.கே.ராமசாமி, கலைஞானம், சத்யா ஸ்டுடியோ பத்மநாபன், ஏ.வி.எம். ராஜா ஆகியோருக்கு அருணாச்சலம் படத்தை தயாரித்து பெரும் தொகை உதவியாக வழங்கினார். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. காவிரிப் பிரச்சினையில்…
Read Moreஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை
சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி,…
Read Moreபாரதிய ஞானபீடக் குழுவினருக்கு, அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் – சீனு ராமசாமி
மதிப்பிற்குரிய பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு, அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் திறப்பு. இந்திய இலக்கியத்தின் உச்ச பீடம், தகுதியான ஒருவரைச் சென்றடைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இக்கடிதத்தை எழுதும் நான் சீனு ராமசாமி. தமிழ்த் திரையுலகில் மானுட அறத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்யும் திரைப்படங்களுக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநராக அறியப்பட்டவன். திரைப்படங்களைத் தாண்டி என் அகம் செயல்படும் முதன்மைத் தளம் கவிதை. எனது கவிதை நூல்களான ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’, ‘கோயில் யானையின் சிறுவன்’, ‘மாசி வீதியின் கல் சந்துகள்’, ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’, ‘மேகங்களின் பேத்தி’, ‘நதியழகி’, ‘முதல் ருசி’, ‘நிலத்தவள்’, ‘தயை’, ‘காற்றால் நடந்தேன்’ ஆகியவையும், ‘சீனு ராமசாமி தேர்ந்தெடுத்த கவிதைகள்’…
Read More