கார் மேனி – செல்வம் விமர்சனம்!!

கதை… சமுத்திரக்கனி & லட்சுமி பிரியா தம்பதி.. இவர்களுக்கு ஒரு மகன்.. கௌதம் மேனன் & அபிநயா தம்பதி இவர்களுக்கு ஒரு மகள்.. கௌதம் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி.. ஒரு குடும்ப உறுப்பினர் போலயே அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மனைவி அபிநயாவின் விருப்பப்படி ஒரு மாதம் வெளிநாடு சுற்றுலா செல்கிறார் கௌதம் மேனன்… அப்போது சமுத்திரக்கனி இடம் அந்த காரை விட்டு செல்கிறார்கள்.. இவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருப்பதால் இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு இந்த காரை எடுத்து வாடகை டாக்ஸி ஓட்டுகிறார் சமுத்திரக்கனி. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த விஷயம் கௌதமுக்கு தெரிய வந்ததா.? ஒரு குடும்பமாக பார்க்கும் அவர்களிடம் சமுத்திரக்கனி செய்ததா சரியா.? நடிகர்கள்… P. SAMUTHIRAKANI – SELVAM LAKSHMI PRIYA CHANDRMOULI…

Read More

காற்றோடு பட்டம் போல, நீலோத்தி பாடலை எழுதிய சாரதி எழுதியுள்ள சிவன் பாடல் ” அகரவா மகாரவா “

இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Yaan Foundation வழங்கியுள்ள இந்த பாடல், பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனைகளை அழகாக இணைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி.தேச மங்கையர்கரசி, முனைவர் சிவ.சதீஷ்குமார் ,பல்கலை வித்தகி திருமதி.ரேகா மணி மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இயக்குனர் ரோமியோ ஜூலியட் லஷ்மன், வசந்தமணி , சுகுமார் அழகர்சாமி, s.சாம் , ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆமீக பாடலை வெளியிட்டனர். இந்த பாடலை பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் அவர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன்…

Read More

‘கே ஜி எஃப்’- ‘மார்கோ’- ‘டாக்ஸிக்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இசையில் புயலை கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அவருடைய இசையில் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ காட்டாளன் ‘விரைவில் வெளியாகிறது

‘கே ஜி எஃப்’, ‘மார்கோ’, மற்றும் ‘டாக்ஸிக்’ போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் பி. அஜனீஸ் லோகநாத் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்… தற்போது ரவி பஸ்ரூர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பான் இந்திய வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள திரை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். பான்…

Read More

காளிதாஸ் 2 – விமர்சனம்…

கதை… ஒரு அப்பார்ட்மெண்டில் புத்தாண்டு அன்று ஒரு சிறுமி காணாமல் போகிறாள்.. சில மணி நேரங்களில் அவள் கொல்லப்படுகிறாள்.. இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி கொண்டு காவல்துறை விசாரிக்கிறது.. போலீஸ் பரத் மற்றும் பவானி ஸ்ரீ இருவரும் விசாரணையில் இறங்குகின்றனர்.. அவர்கள் விசாரிக்க விசாரிக்க எதிர்ப்பாராத திருப்பங்கள்.. இறுதியில் என்ன ஆனது.? நடிகர்கள்… பரத் – காளிதாஸ் சங்கீதா – ரூபா சுந்தரி பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி சினிமா போலீஸ் போல அல்லாமல் எதார்த்த போலீசாக தன்னுடைய பொறுப்பு உணர்ந்து பரத் பட்டைய கிளப்பியிருக்கிறார்.. அவருக்கு பக்கபலமாக ஏசி வேடத்தில் பவானி ஸ்ரீ வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கிறார் பூவே உனக்காக சங்கீதா.. சொல்லாமலே என்ற பாடலுடன் அவருக்கு அறிமுகமும்.. இடைவேளை வரை இவரது கேரக்டர் வெறுமனே…

Read More

‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கன்னட நடிகர், இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். “‘ஓம்மே நின்னானு’ பாடல் 31 வினாடிகளுக்கும், ‘நியாயா எல்லிடே’ பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான…

Read More

திருமதி சசிகலா நாகராஜன் அவர்களுக்கு உலகளாவிய வணிக முன்னணித்திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

18 குழும நிறுவனங்களின் நிறுவனர் திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், உலகளாவிய வணிக முன்னணித்திறனில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்புமிக்க விருது 2026 மார்ச் 31 அன்று சென்னை, இந்தியாவில் வழங்கப்பட்டது. தூரநோக்கு கொண்ட தொழில்முனைவோர் மற்றும் திறமையான தலைவராக விளங்கும் திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், பல துறைகளில் புதுமை, வணிக வளர்ச்சி மற்றும் துரிதமான தலைமைத்துவ முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 18 குழும நிறுவனங்களை வழிநடத்துவதன் மூலம், வணிக மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த கௌரவம், அவருடைய அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான அங்கீகாரமாகும். அவருடைய சாதனைகள், உலகம் முழுவதும் உள்ள எதிர்கால தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. இந்த…

Read More

சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் எதிர்த்து களம் இறங்கும் விஜய் அவர்களின் மாநிலச் செயலாளர்

கடந்த 28 ஆண்டு காலமாக நடிகர் விஜய் அவர்களுடன் மாநிலச் செயலாளராக பணியாற்றி கொண்டு இருந்தவர் ரவிராஜா இவர் தற்போது சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போவதாக செய்திகள் வந்துள்ளன பத்திரிக்கையாளர், கதாசிரியர், குறும்பட இயக்குனர், மக்கள் தொடர்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்திருந்த இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் புரட்சி இயக்குனர் SAC அவர்களின் ஆதரவாக இவரும் …. 10 மாவட்ட தலைவர்களும் செயல்பட்ட காரணத்தினால் இவர்களை புஸ்ஸிஆனந்த் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீக்கம் செய்து விட்டார் என்றாவது ஒரு நாள் விஜய் நம்மை அழைப்பார் என காத்துக் கொண்டிருந்தார்களாம் இந்த நிர்வாகிகள் மீது இதுவரை எந்த அவதூறு செய்திகளோ குற்றச்சாட்டுகளோ வந்ததில்லை இவர்கள் வெளியேற்றப் படுவதற்கு….. புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்று…

Read More

எல்லா கதாநாயகர்களுக்கும் முன்னோடி ராமர்!

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக நடிகர் ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது! எட்டு முறை அகாடமி விருது வென்ற புரொடக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2, 2026: ’ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய அத்தியாயம் இன்று வெளியாகியுள்ளது. திரையுலக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது. இதில் ராமபிரானாக ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் 5,000 ஆண்டுகளாக மனிதகுலத்தின் நினைவில் வாழ்ந்து வரும் ராமர் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம்…

Read More

பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) HPV தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளது!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வாரம் முழுக்க கொண்டாட்டங்களை ரசிகர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சமூகசேவைக்கான அர்த்தமுள்ள முயற்சியாக இந்த கொண்டாட்ட வாரத்தை மாற்றும் நோக்கில் HPV தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய…

Read More

மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு காரில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), காக்கி சட்டை (1985),…

Read More