கதை… அன்பு நகர் என்ற ஒரு குடியிருப்பு பகுதி.. அதில் சில குடும்பங்கள் வசிக்கிறது.. இவர்கள் அனைவரும் ஒன்றாக (ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்..) ஒரு குடும்பம் போல தாத்தா பாட்டி சித்தப்பா மாமா அத்தை என உறவுக்காரர்கள் வசிக்கிறார்கள்.. அங்கு ஒரு கணவன் மனைவி இருவரும் குடியேறுகின்றனர்.. கணவன் மிகவும் கொடுமைக்காரன்.. ஆனால் மனைவி அங்குள்ள எல்லாரிடமும் அன்பாக பழகுகிறார்.. ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போகிறார் கணவன் கொன்று விட்டதாகவே அங்குள்ள குடியிருப்புவாசிகள் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர்.. இது பற்றி போலீஸ் விசாரிக்கும் போது.. தனக்கு திருமணம் ஆகவில்லை என மறுக்கிறார் அஸ்வின்.. அப்படி என்றால் யார் சொல்வது உண்மை.? என்ன நடந்தது என்பதெல்லாம் யூகிக்க முடியாத அசத்தலான திரைக்கதை… நடிகர்கள்… பிக் பாஸ் அர்ச்சனா இவர்தான் கதை நாயகி.. தன்னைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருப்பது…
Read Moreபிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனலின் மூன்றாவது திரைப்படத் தயாரிப்பு – நவம்பர் 27, 2026 அன்று அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜை விழா!
அயோத்தி, நவம்பர் 2026: இந்தியத் திரையுலகில் ஒரு முக்கியமான புதிய திரைப்பட முயற்சியாக, ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான அனுப் மோகன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பான் இந்திய தேசபக்தித் திரைப்படத்தை உருவாக்குகின்றனர். இத்திரைப்படத்தின் பிரம்மாண்டமான பூஜை விழா, வரும் நவம்பர் 27, 2026 அன்று அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஒரு திரைப்படத்தின் பூஜை விழா ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இந்தியத் திரையுலகில் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்குவதுடன், கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இந்தியத்…
Read Moreநிறம் விமர்சனம்… 3/5
கதை.. முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி.. இருவரும் காதலிக்கிறார்கள்.. இருவரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள்.. தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்கும் குணம் கொண்டவர் ப்ரீத்தி.. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் முகேனுக்கும் ப்ரீத்திக்கும் பிரச்சனை வருகிறது.. இதனால் இருவரும் பிரிகின்றனர்.. அடுத்த நாள் ப்ரீத்தி காணாமல் போகிறார்.. இதனால் முகேன் மீது சந்தேகம் வருகிறது.. இவரை போலீஸ் பிடித்து விசாரிக்கிறது.. ஆனால் தன் காதலியை நான் கடத்தவில்லை.. அவர் எப்படி காணாமல் போனார் எனக்கு தெரியாது என்கிறார்.. ஒரு கட்டத்தில் ஜாமினில் வெளியே வருகிறார். அவரின் காதலியை கடத்தியது யார்.? இவர்கள் காதலை ஒன்று கூடினார்களா என்ன நடந்தது.? என்பதெல்லாம் நிறத்தின் கதை.. நடிகர்கள்.. முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், சுரேகா வாணி, கஜராஜ், நிதின் சத்யா, சுரேஷ் சக்கரவர்த்தி…
Read Moreஜெடூசி விமர்சனம்…
கதை… திருவண்ணாமலையை சுற்றி கதைகளம் நகர்கிறது.. அந்தப் பகுதியில் பிரபலமான ஒரு கல்லூரியில் உள்ள பல நபர்கள் கொல்லப்படுகின்றனர் முக்கியமாக.. கல்லூரி பிரின்ஸ்பால்.. ஒரு பேராசிரியை.. சில மாணவிகள் உள்ளிட்ட பலரும் பெண்கள் தலையில் குத்தப்படும் ஜெடூசியால் கொல்லப்படுகின்றனர்.. இந்த கொலைகளை செய்பவர் யார்? அதுவும் ஒரே கல்லூரியில் சேர்ந்த நபர்களைக் கொல்லும் கொலையாளி யார்.? நாயகனுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு.? என்பதெல்லாம் மீதி கதை.. நடிகர்கள்… நாயகன் ஸ்ரீதர்.. இவரின் மாமன் மகள் நாயகி ஸ்வேதா.. (இவர் சீரியலில் பிரபலமான நடிகை.) பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அந்த வேடங்கள் பக்கா பொருத்தம்.. முக்கியமாக ஸ்வேதா கல்லூரிக்கு சென்ற பின் மாடன் உடை.. வீட்டில் இருக்கும் போது பாவாடை தாவணி என இரண்டும் பொருத்தம்.. வழக்கம்போல பெண்களை மிரட்டும் வில்லன் வேடத்தில் கலக்கியிருக்கிறார் ஏ வெங்கடேஷ்..…
Read Moreமௌன மொழிகள் விமர்சனம்
கதை… ஹீரோ ஷகீர் மனோ.. நண்பர் ஸ்ரீமன் இருவரும் ஒரு விளம்பர ஏஜென்ஸி நடத்தி அதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.. ஒரு அழகான பெண்ணை தான் திருமணம் முடிக்க வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நாயகன்… ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவி அர்ச்சனாவையும் சந்திக்கிறார்.. அவர் பழகிப் போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்றவர்.. அவர் மேல் காதலும் கொள்கிறார்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோயின் அர்ச்சனா ஒரு விபத்தில் சிக்கி தன் முக அழகை இழக்கிறார்.. அதன் பிறகு என்ன செய்தார் நாயகன்.. காதலித்து கரம் பிடித்தாரா.? மிஸ் சென்னை பட்டம் பெற்ற அர்ச்சனா அடுத்த என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… பிரபலமான பாடகர் மனோவின் மகன் தான் ஷாகீர்.. அப்பாவைப் போலவே அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும்…
Read Moreஅமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!
அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் உணர்வுகளை இசையின் வழியே அழகாகக் கடத்துகிறது. இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். தந்தையின் அன்பையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையப்படுத்திய இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட…
Read More“சிக்னல் அட் 11.30′ படத்தில் சர்ப்ரைஸ், எமோஷன், எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் இருக்கும்”- இயக்குநர் மலர்விழி நடேசன்!
மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களும், உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு திரைக்கதை என்பது காகிதத்தில் இருக்கும் கற்பனை மட்டுமே. அதைத் திரைப்படமாக மாற்றுவது அதற்காக உழைக்கும் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும்தான். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கிய விதம் கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் டி. இமானின் இசை படத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உதவியுள்ளது. பின்னணி இசையும் பாடல்களும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளன. இந்தக் கதைக்கு உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிப்பு தேவைப்பட்டது.…
Read Moreசிக்னல் அட் 11.30′ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்!”- நடிகை பவ்யா திரிகா
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா. இதுவரை அவர் நடித்த படங்கள் வெவ்வேறு கதைக்களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டிருந்தன. அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத அனுபவம் தந்துள்ளது. சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னடா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை மலர்விழி நடேசன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை பவ்யா திரிகா பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மலர்விழி மேமின் கதை சொல்லும் விதமும், படத்தின் மீதான அவரது பார்வையும்தான் முதலில் என்னை இந்தப் படத்துடன் இணைத்தது. பெண் இயக்குநருடன் பணிபுரிய போகிறோம் என்பதும், ‘சிக்னல் அட்…
Read Moreகார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!
‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமான மு. கார்த்திகேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்க, ராஜசிம்மன், கஜராஜ், அனுராமி, தீபா பாஸ்கர், கவிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பிரேம்குமார் முருகேசன், இசை – ரகு ஸ்ரவன் குமார், படத்தொகுப்பு கே.கே. விக்னேஷ்,பாடல்கள் கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி,நடனம் – ஏ.எம்.ஜே,கலை இயக்கம் – ஜோதின் விஷாக் – அனுப்ஷா, சண்டைக்காட்சிகள் டி.ஆர்,இணை இயக்குநர் ஜெயன். படத்தின் கதை குறித்து இயக்குநர் மு. கார்த்திகேசன்…
Read Moreஅருண் விஸ்வா தயாரிப்பில், தருண் தேஜா எழுதி இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ ஆகிய வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கும் திறமையான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகவுள்ளது. நடிகையாக மட்டுமின்றி, பாடகியாகவும் இசைக் கலைஞராகவும் பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ்,…
Read More