பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம். ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. மக்களின் வரவேற்பில் திரையரங்குகளில் திருவிழாக்கோலமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது.., “‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய…
Read More“ஹே ப்ரூஸ்” – உலகம் முழுவதும் கவனம் பெற்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ
கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் “ஹே ப்ரூஸ்” என்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது. கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த மியூசிக் வீடியோவை ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ளார். இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா , நடன இயக்குனர் / நடிகர் சாண்டி மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியீட்டு ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த மியூசிக் வீடியோவில் குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், VJ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அளித்துள்ளது. இந்த மியூசிக் வீடியோவின் ஒளிப்பதிவு / எடிட்டிங்…
Read Moreஇசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பாடல் வரிகளை, த.வெ.க மற்றும் விஜய்க்கான அரசியல் பாடல்களை எழுதி வரும் கானா சல்லு எழுதியுள்ளார். ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’. ‘கோலி சோடா 2’, ‘விழித்திரு’, ’கொலையுதிர் காலம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட பல படங்களின் மூலம் தமிழில் பல ஹிட் மற்றும் டிரெண்டிங் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையமைப்பில்…
Read Moreநடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!
புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.…
Read More‘லாக் டவுன்’ படத்திற்கு பிறகு நிறைய புதிய படங்களில் நடித்து வருகிறார் விநாயகராஜ்!
‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படக்குழுவினர்கள் பாராட்டு மட்டுமல்ல ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் விநாயகராஜ். திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டிய விநாயகராஜ், சமீபத்தில் வெளியான லாக் டவுன் படத்திலும் தனது நடிப்பு திறமையால் தனித்து தெரிந்தார். இதனை தொடர்ந்து, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ படத்தின் இயக்குனர் கே.ஆர்.ஜெயா இயக்கத்தில் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முழு விபரங்கள் வெளியிடப்பட உள்ளது. நடிகர் விநாயகராஜை, இனி கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்!
Read Moreலெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷன் டீசர் வெளியீடு
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது. லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா…
Read Moreநடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா – சைதன்யா-…
Read Moreலெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷன் டீசர் வெளியீடு
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது. லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா…
Read Moreஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் ‘ரீயூனியன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரீ யூனியன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ரீயூனியன் ‘ திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமிசம் சிவா, குட்டி கோபி ,ஹரிஷ் , அருண் உதயன், சரத் , க்ரிஷ்&அய்ஷூ ,காக்காமுட்டை ரமேஷ், பூவையார், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்திருக்கிறார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார் மேற்கொண்டு இருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில்…
Read Moreகேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA) சார்பில், கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி 26ம் தேதி முதல் 29ம் தேதி மார்ச் 2026 வரை, சென்னை வினாயகா மிஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமை, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு நெறிமுறைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். கேலோ இந்தியா அஸ்மிதா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டி, மகளிர் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முக்கிய மேடையாக அமைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு எடைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வீராங்கனைகள் உயர்ந்த தரமான திறமைகளை வெளிப்படுத்தினர். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகும் வீராங்கனைகளுக்கு…
Read More