மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம்…
Read Moreபெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் ‘Always Choose Kindness’ என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார…
Read Moreயஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்ட ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும், தங்களது ஆட்சியைப் பாதுகாக்கப் போராடும் கேங்க்ஸ்டர் உலகத்தை நம் கண்முன் கொண்டு வர இருக்கும் ‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. பெர்னூரு என்ற கற்பனையான அரசாட்சியையும் அங்கு அதிகாரம் செலுத்தும் குடும்பங்களையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. இங்கு பெண்களே முன்னின்று தலைமை தாங்குவதுடன், தங்களுக்குச் சொந்தமான அதிகாரத்தையும் உரிமைகளையும் தீவிரமாகப் பாதுகாக்கின்றனர். ஆனால், தலைமுறை தலைமுறையாக இந்த அரசாட்சியை நிலைநிறுத்தி வந்த வலிமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் பின்னால்…
Read Moreட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர்…
Read Moreதனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கொடுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்து வருகிறார் எல்.கே. சுதீஷ் MP
தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா எம் பி யும், திரைப்பட தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் MP மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதிகளின் மூத்த மகள் டாக்டர். ஜானு ஸ்ரீ சுதீஷ்க்கும் , ஓசூர் சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிக்குமார் மற்றும் ராதாரவிக்குமார் ஆகியோரின் மகனான அகில் ரவிக்குமாருக்கும் வரும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் ஞாயிறு காலை 8.30 am மணி முதல் 10 am மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.. நவம்பர் 21ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
Read Moreமூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்… அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பு! திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!
விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்குத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் முக்கிய OTT தளங்களுடன் இணைந்து சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல படைப்புகளை உருவாக்கும் வகையில் தனது குழுவையும் விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஹன்சா என்டர்டெயின்மென்ட் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், “பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் என்பது படைப்பாற்றல், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைவதில்…
Read Moreஇயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. தனித்துவமான இசை மற்றும் பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.இந்தப் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ள நிலையில் அதன் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது. விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், ‘அப்பா குட்டி’ படத்தின் இசையும் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு தியாகம் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் இசை கூடுதல் பலம் சேர்க்கும். மு.மாறன் எழுதி…
Read Moreஅம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார்.
ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ” இறப்பின் ரகசியம் ” படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கப் பணிகளை ஸ்ரீமன் மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை நந்தா மேற்கொள்கிறார். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். வெப் தொடர் பற்றி இயக்குனர் இமானுவேல் பேசியதாவது…. கலைஞர்கள் அழிந்தாலும் கலைகள் அழிவதில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும்,…
Read Moreசெலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!
எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து சமந்தா ரூத் பிரபு கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. சில உணவுகளின் சுவை நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்படியொரு நெகிழ்ச்சியான தருணத்தைச் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார். பள்ளிக்காலத்தில் தனக்கு மிகப்பிடித்த உணவாக பல்லாவரத்தில் இருக்கும் துர்கா ஹோட்டல் தயிர் வடையை குறிப்பிடுகிறார் சமந்தா. பள்ளிப் பருவத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்யுமாறும், அங்கிருந்து நேராகத் துர்கா ஹோட்டலுக்குச் செல்வதாக நினைத்துப் பார்க்குமாறும் சமந்தாவிடம் சொல்லப்படுகிறது தன்னுடைய பள்ளிப் பருவத்தின் எளிமையான, இனிமையான நாட்களை மனக்கண்ணில் மீண்டும் காணும் சமந்தா,…
Read More