இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார். அதே திரைப்படத்திற்காக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷும், விழாவில் நேரில் கலந்துகொண்டு தனது Special Mention தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். இந்த இரட்டை தேசிய அங்கீகாரம், ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவிற்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக தரமான கதைகளையும், கலைநயம் மிக்க படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸின்…
Read Moreசினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு!
அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன. சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத்…
Read Moreஅன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். *இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,* “இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான் . கதை பிடித்துப் போய் தான் இந்தப்…
Read Moreமு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகி இருக்கின்றது. ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும், ஆக்ஷன் நிறைந்த காட்சிகளிலும் நடித்து இருக்கின்றார். குடும்ப பாசம், உணர்ச்சிகள், விறுவிறுப்பான காட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.ஏற்கனவே வெளியான படத்தின் Second லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி இடம்பெற்றிருந்தார். இந்த போஸ்டர், அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசமான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விரைவில் தீவிரமான…
Read More‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோக கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளியிடுவதற்கு எங்களை ஊக்குவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் இப்படம் பார்வையாளர்களை சிறந்த முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.…
Read Moreவரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!
இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் திரைப்படம் பேசுகிறது. எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு…
Read Moreசர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’!
தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘Enjoy Enjaami’ பாடல் தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் நவீன இசை அணுகுமுறையையும் இணைத்து உலகளவில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது அது சர்வதேச Netflix திரைப்படத்தின் வாயிலாக மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களை சென்றடைந்துள்ளது. அதேபோல், ‘Maamadura’ பாடலும்…
Read Moreஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். மேலும் ஒரு எலி முக்கிய பாத்திரமாக வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நிவின்பாலி மற்றும் தற்போது தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள நடிகர் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. அதிலும் கடந்த வருடம் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் 100 கோடியும் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு வெளியான அவரது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் 300 கோடியும் வசூலித்து நிவின்பாலியை…
Read Moreஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க 5 காரணங்கள்!
MCU ரசிகர்களே, மீண்டும் ஒன்று கூடுங்கள்! 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அரங்குகள் நிரம்பிய காட்சிகள், நள்ளிரவு சிறப்புக் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களைப் போல ரசிகர்கள் வேடமணிந்து வந்தது என, உலகம் முழுவதும் ரசிகர்களை ஒரே பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் ஒன்றிணைத்தது. இப்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் என்ற பெயரில் திரையரங்குகளுக்கு வருகிறது. இதன் மூலம், மார்வெலின் மிகப்பெரிய சினிமா மைல்கற்களில் ஒன்றை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியாகவிருக்கும் நிலையில், அந்தக் கதையின் தொடக்கப் புள்ளியை மீண்டும் பார்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இதோ: *1. மார்வெலின் மிகப்பெரிய சினிமா நிகழ்வை மீண்டும் ஒருமுறை அனுபவியுங்கள்:* 22 திரைப்படங்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஹீரோக்களையும்…
Read Moreகின்னஸ் உலக சாதனை படைத்த அட்லியின் “ராக்கா” !!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ…
Read More
