கதை… பெற்றோரை இழந்த சிறுவன் திஹான்.. இவன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறான்.. தேசிய கொடிகள் தயாரிக்கும் இடத்தில் பணிபுரிகிறார் தாத்தா.. இவர் இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பது கனவு.. திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார்.. இவரது உயிர் ஊசலாடி கொண்டிருக்கும்போது இவரது கனவை நிறைவேற்ற பேரன் முயற்சி எடுக்கிறான்.. அந்த சிறுவனால் தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிந்ததா.? அவன் என்ன செய்தான்.? டெல்லிக்கு எப்படி சென்றான் என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதை நாயகனாக சிறுவன் திஹான்.. ஒரு பக்கம் தேசப்பற்று.. மறுபக்கம் தாத்தா மீது பாசம் என இரண்டையும் அன்பால் அழகாக செய்து இருக்கிறார் இந்த சிறுவன்.. தாத்தாவை மறந்து பாசம் இல்லாமல் செல்போனில் மூழ்கி இருக்கும்…
Read Moreஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். குற்றப் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் காதல்…
Read Moreஒரு குரலால் ஒரு வாழ்க்கையையே மாற்ற முடியும்: கனவுகளை இசைத்துறையில் சாதனைகளாக மாற்றி, 20 ஆண்டுகளைக் கொண்டாடும் சூப்பர் சிங்கர்!
சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ், நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐந்து ஊக்கமளிக்கும் முன்னாள் போட்டியாளர்களின் வெற்றிப் பயணங்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சென்னை, நவம்பர் xx, 2026: கடந்த இரண்டு தசாப்தங்களாக, சூப்பர் சிங்கர் என்பது ஒரு இசை ரியாலிட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு முக்கியமான மேடையாகவும் திகழ்ந்து வருகிறது. இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த பல இளம் பாடகர்களை, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உருவாக்கிய பெருமை இந்நிகழ்ச்சிக்கு உண்டு. சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, இந்தப் புகழ்பெற்ற மேடையின் மூலம் தங்களது வாழ்க்கையில் புதிய திருப்பத்தைப் பெற்ற முன்னாள் போட்டியாளர்களின் அசாதாரண வெற்றிப் பயணங்களைக் கொண்டாடும் வகையில், ஐந்து நெகிழ்ச்சியான…
Read Moreநவம்பர் 27ல் வெளியாகும் ‘மௌன மொழிகள்’ – இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலம்!
ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழும் ஒரு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மௌன மொழிகள்’ உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று திரையுலக நட்சத்திரங்கள், சமூக ஆளுமைகள் மற்றும் படக்குழுவினர்…
Read Moreரஜினிகாந்த், விஜய், சூர்யா படப் பாடல்கள் முதல் சாய் அபயங்கரின் வைரல் இன்டிபெண்டன்ட் பாடல்கள் வரை – கனடாவிலும் தனது நடனத் திறமையால் கவனம் ஈர்த்த நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர்!
‘காசு பணம்’, ‘கனிமா’, ‘பவழ மல்லி’, ‘விழி வீக்குறா’ உள்ளிட்ட பாடல்களின் நடன இயக்குநரான ஷெரீஃப் மாஸ்டருக்கு கனடாவில் உற்சாக வரவேற்பு – சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவராகப் பங்கேற்பு; அவர் நடத்திய இரண்டு நடனப் பயிற்சி வகுப்புகளும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு அரங்கம் நிறைந்தன! இந்தியத் திரையுலகம் மற்றும் இன்டிபெண்டன்ட் மியூசிக் என 250-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்கம் செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களின் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தது முதல், சாய் அபயங்கரின் இன்டிபெண்டன்ட் இசைப் பாடல்களுக்கான டிரெண்டிங் ஹூக் ஸ்டெப்களை உருவாக்கியது வரை, தென்னிந்தியத் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நடன இயக்குநராகத் தொடர்ந்து பயணித்து வருகிறார்.…
Read Moreதெருக்குறல் அறிவின் புதிய இசை ஆல்பம் ‘ஹலோ’ (HELLO) – காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் பாடல்!
Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ (HELLO) இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது! சமூக அக்கறை கொண்ட கருத்தாழமிக்க பாடல்கள், வலிமையான வரிகள் மற்றும் தனித்துவமான இசைப் படைப்புகள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள சுயாதீன தமிழ் இசைக் கலைஞர் தெருக்குறல் அறிவு, தனது புதிய இசை ஆல்பமான ‘ஹலோ’ (HELLO) மூலம் முற்றிலும் மாறுபட்டதொரு களத்தில் பயணித்துள்ளார். ‘HELLO’ பாடலை தெருக்குறள் அறிவு எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். ஒருவரை முதன்முதலில் சந்திக்கும் தருணத்தில் ஏற்படும் உற்சாகம், மெல்ல மலரும் காதல் உணர்வுகள், மனதுக்கு நெருக்கமான ஒருவரைக் கண்டறிவதால் ஏற்படும் மகிழ்ச்சி என காதலின் அழகான உணர்வுகளை இப்பாடல்…
Read Moreஇந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!
இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பிரிவின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத் தளத்தில் இந்தப் புதிய கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. தனித்துவமான ஆடை அலங்காரம் மற்றும் கலை, கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்டவரான ஸ்நேகா ரெட்டியின் இந்த நியமனம், இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் இந்த முயற்சிக்குப் புதிய பரிமாணம் கொடுத்துள்ளது. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படிக்கிணறுகளை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வருவதை பவோலி ஆர்ட் சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவற்றின் கட்டடக்கலை நுணுக்கங்கள், கலாச்சார முக்கியத்துவம் மற்றும் நீர், கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கு இடையேயான காலத்தால் அழியாத தொடர்பை எடுத்துரைப்பதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்தக் கூட்டணியின் மூலம், இந்தியாவின் கலைப்…
Read Moreதென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’. தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.…
Read Moreஎஸ்.என்.சுரேந்தர் பாடிய ‘ஆரம்பம் ஆரம்பம்’ பாடலுடன் அறிமுகமாகும் புதிய திரைப்படம்!!
காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை GenZ தலைமுறைக்கு GenZ பாணியில் சொல்லி இருப்பதே இந்த லவ் மேட்டர் திரைப்படத்தின் கதைக்கரு. இத்திரைப்படத்தில் ‘லுங்கிபாய்ஸ்’ ராஜ்பிரியன் “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாட உள்ளார். இப்படத்தின் ஆரம்பம் ஆரம்பம் என்ற முதல் பாடலை, எஸ்.என்.சுரேந்தர் பாடி உள்ளார். கதை நாயகனாக இயன் அறிமுகமாகிறார். கதை நாயகியாக அபிநயா அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஶ்ரீவி, திலீப் RJ பொற்கொடி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி மாணவரான மகாதாரா…
Read Moreபிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘இக்னோர் – IGNORE’ பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதுடன், பாடலுக்கான இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் (Arrangements & Programming) மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளைப் பாடலாசிரியர்…
Read More