ஃபானி புயலை சிறப்பாக இந்தியா எதிர்கொண்டுள்ளது – ஐ.நா. பாராட்டு !

ஃபானி புயலை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. சபை பாராட்டு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு புவனேஸ்வர் விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் இன்று ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து அங்கு புயல் கரையைக் கடந்த பின்னர் சூறாவளிக் காற்றும் பேய்மழையும் பெய்யத் தொடங்கியது. பஸ்கள் போன்ற கனரக வாகனங்களையே தூக்கி வீசும் வீடியோக் காட்சிகள் வெளியாகின. மேலும் கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கியுள்ளன. இந்த புயலுக்கு இதுவரை 8…

Read More

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ‘ எனக்கு பெருமைக்குரிய படம் – நடிகர் தினேஷ்.

“அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை “குக்கூ”, “விசாரணை” ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   குக்கூ மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் “திருடன் போலீஸ்”, ” அண்ணனுக்கு ஜே” என பக்காவான எண்டெர்டெயினிங் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.அந்த வரிசையில்  தற்பொழுது  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில்  “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.  “குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும்…

Read More

மே 5 தமிழாற்றுப்படை வரிசையில் பெரியார் கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்!

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர் – அவ்வையார் – கபிலர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – கால்டுவெல் – பாரதியார் – பாரதிதாசன் – அண்ணா –  கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – ஜெயகாந்தன் – அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். தமிழாற்றுப்படையின் நிறைவுக்கட்டுரையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சியில் அரங்கேற்றவிருக்கிறார். நாளை மே 5 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில் விழா…

Read More

k 13 திரை விமர்சனம்!

ஒரு அபார்ட்மென்ட்-ல் உடல் கட்டப்பட்டு இருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம்? இப்படியான சூழலில் இருந்து அருள்நிதி எப்படித் தப்பித்தார் என்பதே படத்தின் திரில்லர் கதை. வெற்றிபெற்ற, பெறும் கலைகளின் ஆகப்பெரும் பலமே எளிமை தான். எளிமை இல்லாத கலை எளிய மனிதர்களை ஈர்ப்பதே இல்லை. அந்த வகையில் பெரும் குழப்பமான திரைக்கதையை K13-ல் கூடுமான வரையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத படம் தான். கொஞ்சமேனும் ஒரு திரில்லிங்கான அனுபவத்தைத் தருவதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. மெளனகுருவையும் இரவுக்கு ஆயிரம் கண்களையும் இணைத்து தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. கதாநாயகிக்கு அடிச்சி அந்தர் பன்ற அளவிற்கான கேரக்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றவுணர்ச்சியோடு மல்லுக்கட்டும் காட்சிகளில் ஹீரோயினோடு முட்டி…

Read More

தேவராட்டம்- விமர்சனம்

மறுபடியும் முத்தையாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு சாதிப்படம் தான் தேவராட்டம். முதலில் இவரிடம் இருந்து மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். வெட்டுவது, குத்துவது, குடிப்பது தவிர அங்குள்ளவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? ஏன் எல்லாப்படங்களிலும் இப்படியே சித்தரிக்க வேண்டும். நிறைய விமர்சனங்களைப் பார்த்தால் இப்படத்தில் சாதி நெடி இல்லை என்று சொல்லி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் படம் நெடுக சாதிய உள்குத்து இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் கெளதம் கார்த்தி அக்கா மகளின் தோழி ஒருவர் பாலியல் வன் புணர்வு செய்யப்படுவார். அந்தப்பெண்ணின் தாய் தகப்பன் போலீஸ் வரை சென்று நீதி கிடைக்காததால் கெளதம் கார்த்தியிடம் வந்து உதவி கேட்பார்கள். அவர்கள் கெளதம் கார்த்திக்கை அய்யா அய்யா என்றே அழைப்பார்கள். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் பையனும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது போன்ற குறியீடுகளை அந்தப்பையனின்…

Read More

தயாரிப்பாளர் சங்கத்தைக் அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் முறையீடு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினை கலைத்துவிட்டு அதன் நிர்வாகியாக பதிவாளர் ஆர்.சேகரை நியமித்ததை எதிர்த்து, நீக்கப்பட்ட தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த முறை நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பொறுப்புக்கு வந்தததில் இருந்தே விஷால் குழுவினர் மீது பல்வேறு புகார்கள் பகிரங்கமாச் சொல்லப்பட்டு வந்தன. சங்கத்திற்குத் தேவையில்லாமல் வேறொரு அலுவலகம் அமைத்தது. சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து 7 கோடி ரூபாயை பொதுக் குழுவின் அனுமதியில்லாமல் எடுத்தது.. சங்க உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியத்தையும், தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கியது.. சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.. சங்கத்தில் கொடுக்கும் புகார்களுக்கு பதிலே அளிக்காமல் இருந்தது.…

Read More

ஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!

நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில  நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த…

Read More

விவசாயத்தையும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்ல வரும் ‘ஐ.ஆர்.8’ படம்|!

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’.இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். ‘சிங்க முகம்’, ‘சொல்ல மாட்டேன்’, ‘வாங்க வாங்க’ போன்ற படங்களை தொடர்ந்து இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியுள்ள நான்காவது படம் இது. இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காமல் படித்த இளைஞர்களிடத்தில்…

Read More

கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம்!

‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால்  (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. 2019 அக்டோபரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More