‘காசு பணம்’, ‘கனிமா’, ‘பவழ மல்லி’, ‘விழி வீக்குறா’ உள்ளிட்ட பாடல்களின் நடன இயக்குநரான ஷெரீஃப் மாஸ்டருக்கு கனடாவில் உற்சாக வரவேற்பு – சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவராகப் பங்கேற்பு; அவர் நடத்திய இரண்டு நடனப் பயிற்சி வகுப்புகளும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு அரங்கம் நிறைந்தன! இந்தியத் திரையுலகம் மற்றும் இன்டிபெண்டன்ட் மியூசிக் என 250-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்கம் செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களின் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தது முதல், சாய் அபயங்கரின் இன்டிபெண்டன்ட் இசைப் பாடல்களுக்கான டிரெண்டிங் ஹூக் ஸ்டெப்களை உருவாக்கியது வரை, தென்னிந்தியத் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நடன இயக்குநராகத் தொடர்ந்து பயணித்து வருகிறார்.…
Read Moreதெருக்குறல் அறிவின் புதிய இசை ஆல்பம் ‘ஹலோ’ (HELLO) – காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் பாடல்!
Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ (HELLO) இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது! சமூக அக்கறை கொண்ட கருத்தாழமிக்க பாடல்கள், வலிமையான வரிகள் மற்றும் தனித்துவமான இசைப் படைப்புகள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள சுயாதீன தமிழ் இசைக் கலைஞர் தெருக்குறல் அறிவு, தனது புதிய இசை ஆல்பமான ‘ஹலோ’ (HELLO) மூலம் முற்றிலும் மாறுபட்டதொரு களத்தில் பயணித்துள்ளார். ‘HELLO’ பாடலை தெருக்குறள் அறிவு எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். ஒருவரை முதன்முதலில் சந்திக்கும் தருணத்தில் ஏற்படும் உற்சாகம், மெல்ல மலரும் காதல் உணர்வுகள், மனதுக்கு நெருக்கமான ஒருவரைக் கண்டறிவதால் ஏற்படும் மகிழ்ச்சி என காதலின் அழகான உணர்வுகளை இப்பாடல்…
Read Moreஇந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!
இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பிரிவின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத் தளத்தில் இந்தப் புதிய கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. தனித்துவமான ஆடை அலங்காரம் மற்றும் கலை, கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்டவரான ஸ்நேகா ரெட்டியின் இந்த நியமனம், இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் இந்த முயற்சிக்குப் புதிய பரிமாணம் கொடுத்துள்ளது. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படிக்கிணறுகளை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வருவதை பவோலி ஆர்ட் சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவற்றின் கட்டடக்கலை நுணுக்கங்கள், கலாச்சார முக்கியத்துவம் மற்றும் நீர், கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கு இடையேயான காலத்தால் அழியாத தொடர்பை எடுத்துரைப்பதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்தக் கூட்டணியின் மூலம், இந்தியாவின் கலைப்…
Read Moreதென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’. தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.…
Read Moreஎஸ்.என்.சுரேந்தர் பாடிய ‘ஆரம்பம் ஆரம்பம்’ பாடலுடன் அறிமுகமாகும் புதிய திரைப்படம்!!
காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை GenZ தலைமுறைக்கு GenZ பாணியில் சொல்லி இருப்பதே இந்த லவ் மேட்டர் திரைப்படத்தின் கதைக்கரு. இத்திரைப்படத்தில் ‘லுங்கிபாய்ஸ்’ ராஜ்பிரியன் “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாட உள்ளார். இப்படத்தின் ஆரம்பம் ஆரம்பம் என்ற முதல் பாடலை, எஸ்.என்.சுரேந்தர் பாடி உள்ளார். கதை நாயகனாக இயன் அறிமுகமாகிறார். கதை நாயகியாக அபிநயா அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஶ்ரீவி, திலீப் RJ பொற்கொடி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி மாணவரான மகாதாரா…
Read Moreபிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘இக்னோர் – IGNORE’ பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதுடன், பாடலுக்கான இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் (Arrangements & Programming) மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளைப் பாடலாசிரியர்…
Read Moreஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் உலகளாவிய டிரெய்லர் வெளியானது!
இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், மர்மம் நிறைந்த காட்சிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியை டிரெய்லர் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது இதுவே முதல்முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம்…
Read Moreகோலாகலமாக நடைபெற்ற ‘பைசாசி’ திரைப்பட துவக்க விழா!
FACEON MEDIYAA (OPC) PVT LTD., நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச ஃபேண்டஸி திரைப்படம் ‘பைசாசி’. எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இளம் நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆத்ரேயா இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.வி.உதயகுமார் மற்றும் சி.கே.முருகன் பாடல்கள் எழுத, ராஜேஷ்குமார் வசனம் எழுதுகிறார். மணிகண்டன் மற்றும் தாமரை நடனக் காட்சிகளை வடிவமைக்க, விஜய் ராஜான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சதிஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் துவக்க விழா 11 ஆம் தேதி, 11 ஆம் மாதம், சரியாக 11:11 மணிக்கு, அதாவது 11.11 : 11:11 mints- ல் சென்னை,…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இதற்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தனர். இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்த முறை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் மனதை வருடும் காதல்…
Read Moreஐரோப்பிய நாடுகளில் திரைப்பட விநியோகத்தில் தடம் பதிக்கும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films)
இந்தியத் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது திரைப்பட விநியோகப் பணிகளை விரிவுபடுத்துகிறது. இதற்காக United Films Europa நிறுவனத்துடன் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டணியின் மூலம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களை ஐரோப்பிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, போலந்து நாட்டில் இருந்து இந்த விநியோகப் பயணம் தொடங்குகிறது. இதன் தொடக்கமாக, தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய பொழுதுபோக்குத் திரைப்படமான ‘ஓம்’ (OM) ஐரோப்பியத் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்தியத் திரைப்படங்களுக்குப் புதிய சர்வதேசச் சந்தைகளை உருவாக்கி, ஐரோப்பிய ரசிகர்களிடம் இந்திய சினிமாவைக் கொண்டு சேர்ப்பதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். இந்திய…
Read More