அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம். உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும். அன்புடன், ப்ரியா-ராஜ்
Read Moreகோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!
Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது. சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா…
Read Moreபிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வரும் இளம் நடிகர் அஜித் விக்னேஷ், தற்போது வெளியாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அவர், கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக, திரையில் அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. மதுரையைச் சேர்ந்த அஜித் விக்னேஷுக்கு கல்லூரிப் பருவத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர், தனது சினிமா கனவை நனவாக்குவதற்காகத் திரைத்துறையில் பயணிக்கத் தொடங்கினார். நடிப்புடன் சிலம்பம், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றதுடன், நடிப்புப் பயிற்சியையும்…
Read Moreமன்சூர் அலிகானின் மிக நீண்ட தலைப்பு கொண்ட “ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்” திரைப்படம், 34 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது!
மன்சூர் அலிகான் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அரசியல் வசனங்களுடன் வந்த படம். பாலு ஆனந்த் இயக்கி இருந்தார். தங்கர் பச்சன் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். சண்டைப் பயிற்சி சாகுல். நடனம் புலியூர் சரோஜா, சிவசங்கர், சலீம்பாபு, சம்பத்ராஜ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ராஜ்கென்னடி திரைப்பட நிறுவனம். மன்சூர் அலிகானுடன் நந்தினி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, வடிவுக்கரசி, அபிலாஷா, ஷர்மிளி, நாகேஷ், வி.கே.ராமசாமி, நெப்போலியன், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், ஆர்.சுந்தரராஜன், குண்டு கல்யாணம், ஒருவிரல் கிருஷ்ணாராவ், குள்ளமணி, கள்ளபார்ட் நடராஜன், டி.கே.நடராஜன், பாண்டு, நெல்லை சிவா, போண்டா மணி என 50க்கும் மேற்பட்ட நடிகர் பட்டாளத்துடன் வெளியாகி, 100 நாட்கள் சக்கைப்போடு போட்ட படம். மன்சூர் அலிகான்…
Read Moreடிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ – அதிகாரப்பூர்வ போஸ்டருடன் அறிவித்த படக்குழு!
இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நகைச்சுவை, காதல், இசை என அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும், நமக்குப் பிடித்தமான மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படமாக ‘மெனி மெனி ஹேப்பி…
Read Moreபிளாக் கோல்ட் விமர்சனம்…
கதை… நாயகன் வெற்றி.. இவர் ஒரு கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்கிறார்.. இவரது அப்பா லிவிங்ஸ்ண்ட்.. அம்மா துளசி மற்றும் தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார்.. இவரது காதலி பிரியாலயா.. அப்பா ஒரு லாரி டிரைவர்.. ஒரு நாள் ஒரு சரக்கை ஏற்றிக்கொண்டு வரும்போது திடீரென காணாமல் போகிறார்.. அவரைத் தேடும் முயற்சியில் ஒரு பக்கம் போலீஸ் அபிராமி தேடிக் கொண்டிருந்தாலும் அப்பாவை தேடும் மகனாக வெற்றி பயணிக்கிறார். அப்போது இவருக்கு திடுக்கிடும் பிளாக் கோல்ட் பற்றிய தகவல்கள் கிடைக்கிறது.. அப்படி என்ன கிடைத்தது.? என்பதெல்லாம் சுவாரசியமான திரில்லர் கதை.. நடிகர்கள்… வழக்கமான சீரியஸ் பார்முலாவில் பயணிக்கிறார் நாயகன் வெற்றி.. குடும்பத்திற்காக ரிஸ்க் எடுப்பதும் அப்பாவை தேடி அலைவதும் என அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார் வெற்றி.. நாயகி ப்ரியாலயா மற்றும் போலீஸ் அபிராமி உள்ளிட்டார் நடிப்பிலும்…
Read Moreஜான் டோ விமர்சனம்…
ஜான் டோ என்றால் அது ஒரு நபரின் பெயர் அல்ல… அடையாளம் தெரியாத ஒருவருக்கு தற்காலிகமாக வைக்கப்படும் பெயர்.. கதை… கேரளாவில் உள்ள ஏரியில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது.. அந்த காரில் இருந்த ஒரு சிறுவன் சடலம் மீட்கப்படுகிறது..அது விபத்து அல்ல ஒரு கொலை என்பதை கண்டுபிடிக்கிறார் கேரள போலீஸ் அர்ஜுன் தாஸ்.. ஆனால் அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்குள் தமிழகத்தில் வேறு ஒரு சிறுவன் மாயமாகிறான்.. இதனால் தமிழகத்திற்கு வருகிறார் அர்ஜுன் தாஸ்.. ஆனால் இங்குள்ள போலீஸ் சஞ்சனாவிற்கும் இவருக்கும் ஈகோ பிரச்சினை முற்றுகிறது.. இரண்டு கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை அறிகிறார் அர்ஜுன் தாஸ்.. அதை எப்படி கண்டுபிடித்தார்.? என்ன நடந்தது? அவரால் இந்த விசாரணையை முடிக்க முடிந்ததா.? என்பதெல்லாம் திரில்லர் திரைக்கதை.. நடிகர்கள்… முதன்முறையாக போலீஸ் வேடத்தில் அர்ஜுன் தாஸ்.. கம்பீரக் குரலுக்கு அவரது காக்கிச்சட்டை…
Read MoreFLAG விமர்சனம்…
கதை… பெற்றோரை இழந்த சிறுவன் திஹான்.. இவன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறான்.. தேசிய கொடிகள் தயாரிக்கும் இடத்தில் பணிபுரிகிறார் தாத்தா.. இவர் இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பது கனவு.. திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார்.. இவரது உயிர் ஊசலாடி கொண்டிருக்கும்போது இவரது கனவை நிறைவேற்ற பேரன் முயற்சி எடுக்கிறான்.. அந்த சிறுவனால் தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிந்ததா.? அவன் என்ன செய்தான்.? டெல்லிக்கு எப்படி சென்றான் என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதை நாயகனாக சிறுவன் திஹான்.. ஒரு பக்கம் தேசப்பற்று.. மறுபக்கம் தாத்தா மீது பாசம் என இரண்டையும் அன்பால் அழகாக செய்து இருக்கிறார் இந்த சிறுவன்.. தாத்தாவை மறந்து பாசம் இல்லாமல் செல்போனில் மூழ்கி இருக்கும்…
Read Moreஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். குற்றப் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் காதல்…
Read Moreஒரு குரலால் ஒரு வாழ்க்கையையே மாற்ற முடியும்: கனவுகளை இசைத்துறையில் சாதனைகளாக மாற்றி, 20 ஆண்டுகளைக் கொண்டாடும் சூப்பர் சிங்கர்!
சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ், நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐந்து ஊக்கமளிக்கும் முன்னாள் போட்டியாளர்களின் வெற்றிப் பயணங்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சென்னை, நவம்பர் xx, 2026: கடந்த இரண்டு தசாப்தங்களாக, சூப்பர் சிங்கர் என்பது ஒரு இசை ரியாலிட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு முக்கியமான மேடையாகவும் திகழ்ந்து வருகிறது. இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த பல இளம் பாடகர்களை, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உருவாக்கிய பெருமை இந்நிகழ்ச்சிக்கு உண்டு. சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, இந்தப் புகழ்பெற்ற மேடையின் மூலம் தங்களது வாழ்க்கையில் புதிய திருப்பத்தைப் பெற்ற முன்னாள் போட்டியாளர்களின் அசாதாரண வெற்றிப் பயணங்களைக் கொண்டாடும் வகையில், ஐந்து நெகிழ்ச்சியான…
Read More