கமல்ஹாசன் – வெற்றிமாறன் சந்திப்பு எதற்காக நடைபெற்றது

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக யூகத்தில் வெளியிடப்பட்ட செய்தி உலகம் சுற்றும் வாலிபனாக அனைத்து ஊடகங்களிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப மிகைப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது ஆனால் வெற்றிமாறன் தரப்பு அப்படியெல்லாம் இல்லை என்று கூறுகிறது அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மத்திய அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் ஆபத்து ஒன்றைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே கமலஹாசனை வெற்றிமாறன் சந்தித்திருக்கிறார் கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா துறை சம்பந்தபட்ட தீர்ப்பாயத்தை திரைத்துறையினரின் கருத்துக்கூட கேட்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் கலைத்துவிட்டது சினிமா என்கிற காட்சி ஊடகம் வலிமையானது  சர்வாதிகார, மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சிகளுக்கு எதிராக சினிமா என்கிற காட்சி ஊடகம் இந்தியாவில் வலிமையாக பயன்படுத்தப்பட்டு வெற்றி கிடைத்திருக்கிறது அதனால் தணிக்கை முடிந்து தியேட்டர்கள்,OTT…

Read More

நடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர்  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…. என் கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் எர்த்மூவர்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் எற்பட்ட இழப்பைச் சரி செய்ய 2018 ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கித் தருவதாக சென்னையில் உள்ள கமலகண்ணன் கூறினார். அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை, கமலகண்ணன் எனக்கும் என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்குத் தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படியும் கூறினர். அவரை நம்பி…

Read More

தனுஷ்ன் அடுத்த நகர்வு என்ன?

அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை தனுஷ் முந்திவிடுவார் போல தெரிகிறது. அந்த அளவுக்கு மாதத்துக்கு ஒரு பட அறிவிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் ஒவ்வொரு புது அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. சமீபத்தில், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தனுஷுக்கு நீண்ட நாளாக தெலுங்கில் நடிக்க வேண்டுமென்பது ஆசை. இவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், தனுஷ் படங்கள் தெலுங்கில் பொதுவாக டப்பாகி வெளியாகும். இது, முதல் நேரடித் தெலுங்குப் படமாக உருவாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் என PAN இந்தியா ரிலீஸாகப் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. நூறு கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகவும் தகவல். மேலும், தனுஷுக்கு அதிக சம்பளம் பெரும் படமாகவும் இது இருக்கும்…

Read More

குடும்பத்தலைவிகளுக்கு 1000ம் ரூபாய் எப்போது?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்தச் சூழலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில்கூட இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக…

Read More

திமுகவின் பிடீம் காங்கிரஸ்-அண்ணாமலை

தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், பிராந்திய கட்சியாக மாறிவிட்டதாகவும், திமுகவின் பி-டீம் ஆகவும் செயல்படுகிறது எனவும் பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை, “புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆர்டிகிள் ஒன்றில் இடம்பெற்றுள்ள ’யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வார்த்தைகளையே அம்மாநில ஆளுநர் தமிழிசை பயன்படுத்தியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவரே தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசு என்பதன் மூலம் திமுக சொல்ல வருவது என்ன? அதன் உள்ளர்த்தம் என்ன? 2004ஆம் ஆண்டு முதல் 10…

Read More

கைபேசியில் கதைசொல்லி மோகன்லாலிடம்கால்ஷீட் வாங்கிய இயக்குனர்

மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மலையாள நடிகர் பிருத்விராஜ். இந்த படத்தின் 2ம் பாகம் இயக்கும் நோக்கத்துடன்தான் படத்தின் கதையை முடித்திருந்தார். இரண்டாம் பாக கதை வெளிநாட்டில் நடப்பதால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படத்தை தொடங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து புரோ டாடி என்ற படத்தை இயக்குகிறார். இது மிகவும் ஜாலியான படம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் கொண்டாட்டமான, ஜாலியான படங்கள் வெளிவந்து ரொம்ப காலமாகி விட்டது. அதுமாதிரியான படங்களுக்கு நிறைய நடிகர்கள், சிரிப்பு, சந்தோஷம், நகைச்சுவை, இசை என்றெல்லாம் யோசிக்கும்போது, அய்யோ இது பெரிய படம், நிறைய இடங்களில், நிறைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்போம். எனவே அதை ஒதுக்கி வைத்துவிடுவோம். அதனால்தான் மலையாளப் படங்கள்…

Read More

போனி கபூரின் மொழி மாற்று மோகமும் தொலைநோக்கு பார்வையும்

இந்திய சினிமாவில் எந்த திட்டமிடலும் இல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளில் வெற்றிபெற்ற, அல்லது படைப்புரீதியாக பாராட்டுக்களை பெற்ற படங்களின் மொழிமாற்று உரிமையை பைனான்சியர்கள், பிரபல தயாரிப்பாளர்கள் வாங்கும் வழக்கம் நீண்டகாலமாக உள்ளது  ஒரு படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கும்போது நிதி நெருக்கடி ஏற்படும் அந்த நிலையில் மொழிமாற்று உரிமை, தொலைக்காட்சி உரிமைகளை விற்பனை செய்யவேண்டிய சூழல் தயாரிப்பாளருக்குஏற்படும் அப்போது முடிந்தவரை குறைந்த விலைக்கு அந்த உரிமையை வாங்க பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள் முயற்சி எடுப்பார்கள் தனுஷ் நடித்து வெளியான ” துள்ளுவதோ இளமை” படம் திட்டமிட்ட அடிப்படையில் வெளியிடுவதற்கு நிதி நெருக்கடி அப்போது அந்தப் படத்தை ஒரு படமாகவே மதிக்கவில்லை இருந்தபோதிலும் அப்படத்தின் மொழிமாற்று உரிமையை இரண்டு லட்ச ரூபாய்க்கு முதல்வன் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மாதேஸ் வாங்கினார் அந்தப் படம் வெளியாகி பாக்ஸ்ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியது…

Read More

நடிகர் சங்க தேர்தலை அரசியலாக்கிய நடிகை விஜயசாந்தி

சென்னை மகாணம் என்று இருந்தபோதுதென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற அமைப்புசென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கியது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழி படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்று வந்தது மொழி அடிப்படையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழிகளுக்கான சினிமா சங்கங்கள், படப்பிடிப்புகள் அந்தந்த மாநிலங்களில் செயல்பட தொடங்கியதுஆனால், தமிழில் மட்டும்தான் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கிறது. இந்த சங்கத்தில் போட்டியிட மொழி, இனம் எப்போதும் தடையாக இருந்தது கிடையாது அரசியல்வாதிகள் ஆதிக்கமும் இருந்தது இல்லை அதேபோன்றுதான் பிற மாநிலங்களில் நடிகர் சங்க அமைப்புகள் இயங்கின ஆனால் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சூழ்நிலை இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது தாங்கள் நடிக்கும் படங்களில் சாதி,மொழி, இன வேறுபாட்டுக்கு எதிராக…

Read More

சினிமா தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றங்கள்

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகம், சினிமா இவற்றுக்கு சட்டத்தை அமுல்படுத்தியது இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அதில் சில மாற்றங்களை செய்து 1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது அதன் அடிப்படையில் சினிமா தியேட்டர்களில்  திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட தணிக்கைத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் தணிக்கை குழு படத்தை பார்த்து அவற்றிற்கு U, UA,Aஎன படத்தின் தன்மைக்கு ஏற்ப சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்போது இந்த சான்றிதழ் முறையில் சிறு மாற்றங்களைச் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதற்காக1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திரைப்படத் தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்படும் படங்களை திரைப்படத் தணிக்கை டிரிப்யூனலில் முறையிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த டிரிப்யூனல்…

Read More

ரஜினிகாந்த் அமெரிக்க பயணம் கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அரசியல், சினிமா, பொது விஷயங்களில் கருத்துகளை கூறுவது, விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தொலைக்காட்சி விவாதங்களில் கட்சி சார்பற்றவராகவும் கலந்துகொள்வார் நடிகை கஸ்தூரி தற்போதுநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க சென்றது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஊடகங்கள் ரஜினிகாந்த் எப்போது அமெரிக்கா செல்வார், உடன் செல்லப்போவது யார், எப்போது திரும்புவார் என்று கிடைத்த இரண்டு புகைப்படங்களை வைத்து கொண்டு செய்திகளை வெளியிட்டு வரும் சூழலில்நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள கேள்வி விவாத பொருளாக மாறும் சாத்தியம் உள்ளது அவர் ட்விட்டரில் எழுப்பியுள்ள கேள்வியில் கொரோனா தொற்று காரணமாக மே முதல் இந்தியர்கள் அமெரிக்கா வர அந்த நாடு தடை விதித்துள்ளது. யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில் ரஜினி மட்டும் எப்படி அமெரிக்காவிற்கு சென்றார். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். நான் இப்படி கேட்க காரணம், அமெரிக்காவில் பணிபுரியும்,…

Read More