தினகரன்கோவில்பட்டிக்கு தொகுதி மாறியது ஏன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமல்லாமல் இன்னொரு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக நேர்காணலின் போது அறிவித்தார். அந்த வகையில் அவர் தேனி மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும், தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கட்சிக்குள் எழுந்துகொண்டிருந்தன. இந்நிலையில்தான் நேற்று (மார்ச் 11) வெளியிடப்பட்ட அமமுகவின் இரண்டாம் கட்ட்ப் பட்டியலில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியை தினகரன் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? “கோவில்பட்டி தொகுதிக்குள் கோவில்பட்டி ஒன்றியம், கயத்தாறு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்கள் இருக்கிறது. கயத்தாறு ஒன்றியத்தில் முக்காவாசி 2008 இல் மறு சீரமைப்பின் போது கோவில்பட்டி தொகுதிக்குள் வந்துவிட்டன. கயத்தாறு ஒன்றிய சேர்மனுக்கு 16 கவுன்சிலர்கள். அதில் 10 கவுன்சிலில் அமமுகவினர் ஜெயித்துவிட்டார்கள். அதிமுக சார்பில் 2 கவுன்சிலர்கள். இந்த ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் கடம்பூர் மாணிக்கராஜா. இந்த…

Read More

பாரதிராஜாவுக்கு பதிலடி – சொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவருகிறது தணிக்கைக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசு வழங்கும் சிறுபடங்களுக்கான மானியம் ஆகிவற்றுக்கு இந்த சங்கமே அங்கீகார சான்றிதழ்கள் இன்றுவரை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, புரடியூசர் கில்டு என வேறு இரண்டு அமைப்புகள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்புகள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அதிகாரம் செலுத்த முடிவதில்லை பிற மொழி, மற்றும் மொழிமாற்று படங்களின் படத்தயாரிப்பாளர்களுக்கான அமைப்பாகவே இயங்கிவருகின்றன இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நவம்பர் 22/2020 அன்று  நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு முரளி@ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்…

Read More

அறிமுக நடிகைகளின் அட்டகாசம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவரை நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர் அது தங்களுக்கு ஒரு புரமோஷன் என்று பெருமை கொண்டனர் நடிகர்கள், இயக்குனர்கள் புதிய படங்கள் தயாரிப்பதை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியபின் எல்லா நடைமுறைகளும் மாறிப்போனது திரைப்படம் தொடங்கி படம் வெளியாவதற்குள் பல முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெறும் நாயகன் முதல் அனைத்து நடிகர்களும் இதில் பங்கேற்கும் வழக்கம் அடியோடு அழிந்துபோனது மூத்த, முன்னணி நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்வுகளுக்கு வருவதை தவிர்த்து அந்த பழக்கத்தை நிரந்தரமாக்கிவிட்டனர் அதனை தற்போது நடிக்க வரும் புதுமுக நடிகைகளும் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர் என்கின்றனர்சிறுபடத் தயாரிப்பாளர்கள் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படம் தயாராகி இரண்டு வருடங்களாக வியாபாரம் ஆகாமல் முடங்கி…

Read More

சினிமாவை கற்றுக்கொள்ள படம் தயாரித்த நடிகர்

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் ‘டிக்  டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற  ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு…

Read More

தமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும்

தமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று திமுகவின் பொருளாளர், மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆர்நீக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நாயகனாக நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்காலத்தில் பல தடைகளைக் கடந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தை பல முறை ரி-ரிலீஸ் செய்து வெளியிட்டும் ஒவ்வொரு முறையும் பல ஊர்களில் அந்த சமயத்தில் வெளியாகும் புதிய படங்களுக்குப் போட்டியாக ஓரிரு வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்திருக்கிறதுவெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதை யோசித்து கூட பார்க்க முடியாக காலகட்டத்தில் ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் உலகம் சுற்றும்…

Read More

கார்த்தி சிதம்பரத்தை எச்சரித்த தினேஷ்குண்டுராவ்

காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை சொல்லி ஊடகங்களில் உலா வருபவர் கார்த்தி சிதம்பரம்.அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 8 பெண்களுக்கும் நான்கு தொகுதிகளை சிறுபான்மையினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றவர்களை டென்ஷன் ஆக்கியது.இந்த சூழலில் கடந்த மார்ச் எட்டாம் தேதி இரவு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் பல்வேறு கோஷ்டி தலைவர்களையும் தமிழகத்தின் காங்கிரஸ் எம்பி களையும் தனித்தனியாக சந்திக்க முடிவு செய்தார் குண்டு ராவ். இதற்காக அவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே .ஆர். ராமசாமி உள்ளிட்ட பல தலைவர்களும் எம்.பி களும்…

Read More

பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார் தந்தை தியாகராஜன்

இந்தியில் வெளியாகி தேசிய விருதுகளைக் குவித்த திரைப்படம் ‘அந்தாதூன்’. ஆயுஷ்மான் குர்ரானா, தபு நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் தியாகராஜன். நடிகர் பிரசாந்த் நடிக்க படம் ‘அந்தகன்’ எனும் பெயரில் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்தப் படம் துவங்கியதற்குப் பின்னணியில் மிகப்பெரிய போராட்டமே நடந்து முடிந்திருக்கிறது. முதலில், இந்தப் படத்தை இயக்க ஒப்பந்தமானது இயக்குநர் மோகன் ராஜா. இவர் விலகிவிட, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் இயக்குநர் ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். அதன்பிறகே, சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்தி படத்துக்குள் வந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமானார். தயாரிப்பாளர் தியாகராஜன் தலையீட்டால் இயக்குநர் ஃபெட்ரிக் படத்திலிருந்து விலகுகிறார் என ஏற்கெனவே செய்திகள் உலவி வந்த நிலையில் அந்ததகவல் உண்மையாகியிருக்கிறது. பிரசாந்த் நடிக்க அந்தகன் படத்தின் படப்பிடிப்பு 10.03.2021 அன்று…

Read More

சிவபார்வதி காதலை கௌரவப்படுத்தும் ராதேஷியாம்பட போஸ்டர்கள்

ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்கிறது படக்குழு பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். பின்னணியில் பனி படர்ந்துள்ளது. காதல் மற்றும் கனவுலகங்களின் கலவையாக இது அமைந்துள்ளது.படத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்டர் உள்ளது. இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.அதிரடி காதல் படமான ‘ராதே ஷியாம்’-ல், பத்து வருடங்களுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது…

Read More

*மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா – கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..!*

*மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா – கெவின் நடிப்பில் உருவாகியுள்ள  ‘பூம் பூம் காளை’..!*   *தேனிலவு செல்லும் புதுமண தம்பதிகளின் ஈகோ யுத்தமே ‘பூம் பூம் காளை’..!*   *‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’..!*   ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.   காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார்  இயக்குனர் R.D.குஷால் குமார்.. ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்..   நாயகன்,…

Read More

19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.

19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.   (19th PUNE INTERNATIONAL FILM FESTIVEL – 2021) 11th TO 18th MARCH   மகாராஷ்ட்டிரா  மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது,   வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.   மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக “கட்டில் திரைப்பட உருவாக்கம்”  என்ற நூலை வெளியிடுகிறேன்.   சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு…

Read More