‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (Production No. 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய படமான ‘இறுதிப்பக்கம்’ மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இப்படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது. இப்படத்தில்’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் குமார சம்பவம் புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா நடிக்க, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். திருச்சி மற்றும்…
Read More48 மணி நேரத்தில் சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர், வெளியான வெறும் 48 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த ட்ரைலர் உலக அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ட்ரைலர் வெளியாகி வெறும் 48 மணி நேரத்திற்குள், அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து, இந்த படம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நிரூபித்துள்ளது.…
Read Moreஅரசு கவின் கலைக் கல்லூரி (Government College of Fine Arts),
1850-ல் டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பழமையான கலை நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஓவியம், சிற்பக்கலை மற்றும் கலை வடிவமைப்பு சார்ந்த இளங்கலை (BFA) மற்றும் முதுகலை (MFA) படிப்புகளை வழங்குகிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூரில் உள்ள இது, நவீன இந்தியக் கலையின் தொட்டில் என்றும் அழைக்கப்படுகிறது. 1928 ல் – திரு.தேவி பிரசாத் ராய் சௌதித்ரி அவர்கள் இணை முதல்வராக கல்லூரி நிர்வாகத்தை ஏற்கிறார். 1929 ல் இந்தியாவின் முதல் முதல்வர் என்கிற பெருமை இவரையே சாரும். இந்தக் கல்லூரி கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது மற்றும் 175 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைத்துறையில் பல ஓவியக் கலைஞர்களை, சிற்பிகளை,திரைப்பட முன்னனி கலை இயக்குனர்களை, நடிகர்களை, சகலகலா வல்லவர்களை மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரி என்ற பெருமையை பெறும். கடந்த மாதம் பிப்ரவரி…
Read Moreபெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கோலோச்சி வரும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது…
Read MoreZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!
ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம்…
Read Moreகாதல் ரீசெட் ரிப்பீட் – விமர்சனம்
கதை… நாயகி ஜியா சங்கர்.. இவரை ஒருதலையாக காதலிக்கிறார் நாயகன் மதும்கேஷ்.. ஆனால் நாயகிக்கு அர்ஜுன் அசோகன் மீது காதல்.. இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் திடீரென பழையது அனைத்தையும் மறந்து விடுகிறார் நாயகி ஜீயா.. தான் யார் என்று தெரியாத சூழ்நிலையில் இவருக்கு அறிமுகம் ஆகிறார் ஒரு தலை காதலன் மதும்கேஷ்.. அதன் பிறகு நடந்தது என்ன.? யாருடைய காதல் கைகூடியது? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகி ஜியா ஷங்கர்.. தன்னை சுற்றியே கதைக்களம் இருப்பதை உணர்ந்து தன் நடிப்பின் மூலம் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்.. ஒரு தலை காதலனாக காதலை சொல்லவும் முடியாமல் தவிக்கும் காட்சியில் மதும் கேஷ் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் மற்றொரு நாயகன் அர்ஜுன்…
Read Moreபார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கென் கருணாஸ் கூட்டணியின் ‘யூத் – Youth’படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR
பாடகர் – இசைக்கலைஞர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ‘யூத் – Youth’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யூத் – Youth’ திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இவர்களுடன் சின்னத் தமிழா – தாஜ் மோலா – கெட்டவன் மணிகண்டன் – சுரேன் வின்சென்ட் உள்ளிட்ட டிஜிட்டல் திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.…
Read Moreடாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ZERRO Women Honours 2026’ நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்!
பல்வேறு துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்த 50 பெண்மணிகளையும் சமூகத்தில் அவர்கள் அளித்த முக்கிய பங்களிப்புகளையும் தாக்கத்தையும் பாராட்டும் வகையில் ZERRO நிறுவனம் சமீபத்தில் ’ZERRO Women Honours 2026’ என்ற விருது விழாவை நடத்தியது. வணிகம், கல்வி, சமூக சேவை, விளையாட்டு, பத்திரிகை துறை, கலை, சுகாதாரம், தொழில் முனைவோர், சமூக தலைமை போன்ற பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியால் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து முன்னோடியாக திகழும் பெண்களை கொண்டாடுவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம். இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ரவி மற்றும் டாடின் எஸ். காவேரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இதில்…
Read MoreTorque Entertainment Delivers a Landmark Musical Experience with the Grand Finale of Hip Hop Tamizha’s “Return of the Dragon Machi” World Tour
Chennai witnessed an electrifying and unforgettable musical spectacle as Torque Entertainment, one of the most reputed names in the live event industry, successfully hosted the grand finale of *Hip Hop Tamizha’s* “Return of the Dragon Machi” World Tour. The event has now been widely celebrated by fans and industry insiders as “The Concert of the Decade,” marking a historic moment in the city’s live entertainment landscape. With over 15 years of experience in the event industry, Torque Entertainment has established itself as a powerhouse in the world of live shows…
Read Moreசத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!!
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் D.இமான்…
Read More