மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.…
Read Moreநடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு…
Read Moreநடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!
பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. ‘AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு…
Read More‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!
ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’! காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு…
Read Moreநடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. #DarkTrailer: https://youtu.be/fKUPkoYkhII?si=fwgmrkGhdNpEjsQJ ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அனைத்து…
Read Moreஅல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!
இந்தியா, ஜூன் 15, 2026: மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.…
Read Moreபழைய பள்ளி உணர்வு டிஜிட்டல் உலகத்தை சந்திக்கும் போது: ஜூலை 3 வெளியீட்டுக்கு முன் ‘பிரிதம் & பெட்ரோ’ டிரெய்லர் வெளியீடு
அவிநாஷ் அருண் இயக்கத்தில் அர்ஷத் வார்சி, விக்ராந்த் மாஸ்சி, விர் ஹிரானி, மோனா சிங் மற்றும் போமன் இரானி நடித்த இந்த தொடர் ஜூலை 3 அன்று, ஜியோஹாட்ஸ்டாரில் மட்டுமே வெளியிடப்படுகிறது Trailer Link: https://youtu.be/uCjkRVV0-qU?si=-0SnnbSzob1e5e_1 **ஜூன் 15, 2026:** பார்வையாளர்களுக்கு பதில்களை வழங்குவதற்குப் பதிலாக மேலும் கேள்விகளை எழுப்பிய சுவாரஸ்யமான முதல் பார்வைக்குப் பிறகு, ஜியோஹாட்ஸ்டார் இன்று ‘பிரிதம் & பெட்ரோ’வின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை, மர்மம், குழப்பம் மற்றும் எதிர்பாராத கூட்டாண்மைகளால் நிரம்பிய இந்த தொடர் ஒரு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்குகிறது. கோவாவின் வண்ணமயமான பின்னணியில் அமைந்துள்ள ‘பிரிதம் & பெட்ரோ’, முற்றிலும் மாறுபட்ட இரண்டு உலகங்கள் மிகவும் விசித்திரமான சூழ்நிலைகளில் மோதும் கதையை பின்தொடர்கிறது. கதையின் மையத்தில் உள்ளவர்கள் பெட்ரோ — தனது உள்ளுணர்வை நம்பும் பழைய பாணி காவலர் —…
Read Moreசுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா
நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும்…
Read Moreமாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு சென்னை — இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரிடமிருந்து வரப்பெற்ற அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதத்தையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநரும் சமகாலக் கவிஞருமான சீனு ராமசாமி தனது ஆழமான நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். துணைத் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தில், கலை, சமூகம் மற்றும் இலக்கிய உலகிற்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றிவரும் பன்முகப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அவரது ‘சில பூக்கள்’ கவிதையை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவர், எவ்விதப் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பாராமல், தங்களது நற்செயல்களால் நறுமணம் பரப்பி, அமைதியான தார்மீகக் குணத்துடனும் சுயநலமின்றியும் வாழும் மனிதர்களை இக்கவிதை…
Read Moreநடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா
ராம் தேவ் பிக்சர்ஸ் மற்றும் கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அப்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- ஆர் .சந்திரசேகரன் – டி. ராம்குமார் ஆகியோர்…
Read More