ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை…

Read More

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்: மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்கிறது

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான…

Read More

10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10; ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழாவிற்கு ரசிகர்களை வரவேற்கும் விஜய் சேதுபதி

சென்னை, ஆகஸ்ட் 07,2026: பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், பிக்பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தாண்டி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவமாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 100 நாட்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரவலான உரையாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு கலாச்சார நிகழ்வாக இது மாறியுள்ளது. 10வது சீசனை முன்னிட்டு, கடந்த ஒரு தசாப்தமாக பிக்பாஸை வெற்றிப் பாதையில் வழிநடத்திய ரசிகர்களுக்கு “பத்தாண்டு வாழ்த்துகள்” தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்காகவே உருவான ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட பொழுதுபோக்கு கொண்டாட்டமாக அமைகிறது. இந்த லாஞ்ச் புரோமோ, பிக்பாஸ் ஒரு…

Read More

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.…

Read More

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.…

Read More

நகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக்…

Read More

நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா- சுதாகர் செருகூரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் தயாரான ‘தி பாரடைஸ்- The Paradise ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான ‘தி பாரடைஸ்’- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான ‘ஆயா ஷேர்’ … என  இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். ‘நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த…

Read More

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த DC விமர்சனம்…

கதை… ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகன் படிப்புக்காக தங்கள் நிலத்தை விற்று ₹7 லட்சம் சேர்த்து வருகின்றனர்.. அப்போது இவர்களை பார்த்து உதவிக்காக அழைக்கும் ஒரு போலீஸ்காரர் இவர்களிடம் இருக்கும் ₹ 7 லட்சத்தை அறிந்து கொள்கிறார்.. இதனை அடுத்து அந்த தந்தையை கொன்று பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார் .. இதனால் அந்த குடும்பம் நீதி கேட்டு அலைகின்றனர்.. ஆனால் காவலர்களே துரோகம் செய்துவிட்டதால் வேறு வழி இன்றி ரவுடி கும்பல் லோகேஷ் குழுவை அணுகுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? லோகேஷ் அவர்களுக்கு எப்படி உதவினார் காவலர்களை எதிர்த்து எப்படி போராடினார் என்பதெல்லாம் கதை.. நடிகர்கள்… • லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ் • வாமிகா கபி – சந்திரா • சஞ்சனா ஏ.கே. – பார்வதி • கஸ்தூரி ராஜா…

Read More

வதந்தி 2 – இணையத் தொடர் விமர்சனம்…

கதை… எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி என்ற ஒரு வெப் சீரிஸ் வந்தது.. அந்த வெற்றியை தொடர்ந்து இது வதந்தி2.. இதில் போலீஸ் அதிகாரியாக சசிகுமார் நடித்திருக்கிறார்.. ஓர் அரசு நிகழ்ச்சிக்காக ஒரு பள்ளம் தோண்டப்படுகிறது.. அப்போது அங்கிருந்து ஒரு எலும்புகூடு கண்டுபிடிக்கப்படுகிறது.. அதில் ஒரு கை இல்லை.. அதன் பிறகு அடுத்த எலும்புககூடு கண்டு பிடிக்கப்படுகிறது.. இந்த எலும்புக்கூடு உருவம் யார் என விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் சசிகுமார்… இறுதியாக இரண்டும் பெண்கள் உடையது என்று தெரிய வருகிறது.. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர்களை கொலை செய்து இங்கே புதைத்தவர் யார் என கொலையாளியை தேடி அலைகிறார் சசிகுமார். இறுதியில் என்ன ஆனது என்பதை பல மர்ம முடிச்சுகளுடன் சுவாரசியமாக திரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்.. நடிகர்கள்……

Read More

போட்டோகிராபர் – விமர்சனம்.. 3/5.. திரில்லர் போட்டோக்ராபர்

கதை… நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தை தொழிலதிபராக இருந்தாலும் அவரை சார்ந்து வாழாமல் தனக்கு பிடித்த போட்டோகிராபி தொழிலில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் நாயகன் அஷ்ரப்.. இதுவரை யாரும் எடுத்திடாத ஒரு போட்டோ கிளிக் சரித்திரம் படைக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவருக்கு மதிகெட்டான்சோலை என்ற அடர்ந்து காட்டுப்பகுதியில் ஒரு தங்க மரம் இருப்பதாக அறிகிறார்.. எனவே அதைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் தனியாக செல்கிறார்.. ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அவர் உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை.. நடிகர்கள்… அஷ்ரஃப்…

Read More