பாஜகவுக்கு வாக்களித்தால் பிரியாணி சாப்பிடலாம் – நமீதா

பாஜக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடிகை நமீதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமரை சின்னத்தில் வாக்களித்தால், விலையில்லா எரிவாயு சிலிண்டரில் பிரியாணி சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டே, இலவச கேபிள் இணைப்பில் மகிழ்ச்சியாக தொலைக்காட்சித் தொடா் பாா்க்கலாம் என்று நடிகை நமீதா பிரசாரம் செய்தார் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. இதோடு புதிய தமிழகம் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்த சரவணன் கடந்த 14ஆம்…

Read More

அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிறுவனங்களில் 6 கோடி சிக்கியதா?

தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், ரூ.6 கோடி சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுக என முக்கிய கட்சியினருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அண்மையில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினரின் கல்வி, நிதி நிறுவனங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்தியாலயா ஆண்கள் மெட்ரிக்…

Read More

எ.வ.வேலுவுக்கு துரோகம் செய்த கட்சி நிர்வாகி

திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 2 நாள்கள் ரெய்டு செய்தனர். ஆனால் அதில் எதிர்பார்த்துச் சென்ற எதையும் கைப்பற்ற முடியவில்லை என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வேலுவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மின்னம்பலத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக நமக்கு மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த வி.பி. துரைசாமி தரப்பிலிருந்துதான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்புக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது; வட மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் செலவுக்கான பணம் முழுவதும் வேலு மூலமாகத்தான் விநியோகம் செய்யப்படுகிறது; அவரை நெருக்கிப்பிடித்தால் அந்த வழங்கல் பாதையை அடைத்துவிடலாம்; அது அவர்களுக்கு ஒரு நெருக்கடியைத் தரும் என்றும் யோசனையாகச்…

Read More

தமிழகத்தில் இஸ்லாமிய பெண்கள் வாக்கு யாருக்கு?

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் எந்த அளவுக்கு பாஜக மற்றும் அதிமுகவுக்குக் கிடைக்கும் என்பதை அறிவதற்காக மத்திய, மாநில உளவுத் துறைகளின் சார்பில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் இஸ்லாமியப் பெண்களில் கணிசமானவர்கள் பாஜகவை ஆதரிப்பதாகப் பதிவாகியிருக்கிறது என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றால் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து இப்போது தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவும் பாமகவும் கூட்டுச்சேர்ந்துள்ள நிலையில், இஸ்லாமியர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்குமா, எந்த அளவுக்குக் கிடைக்கும்? குறிப்பாக பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என உளவுத்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் ராமகிருஷ்ணனும், பாஜக கூட்டணியில் அதிமுகவின் சையது சுல்தானும்…

Read More

கமல்ஹாசனுக்காக வாக்கு சேகரிக்கும் சுஹாசினி

கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இருவரிடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இருவரும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி மக்களை சந்திக்கின்றனர். கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லத்தரசிகளுக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசமாக வழங்குவதாக அறிவித்தார். இவருக்கு ஆதரவாக நடிகை நமீதா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகை சுஹாசினி நேற்றும் இன்றும் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். கமல்ஹாசனை ஆதரித்து அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களை வீடு, வீடாக சென்று சந்தித்த அவர் தேர்தல் துண்டு பிரசுரங்களை வழங்கி டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 28) காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடிகை…

Read More

துரோகி தங்க தமிழ்செல்வன் எட்டப்பன் செந்தில்பாலாஜி

பிரச்சாரம் முடிவடையச் சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில் தமிழகத் தேர்தல் களத்தில் சூடு, ஆவி, புழுதி என பலதும் பறக்கிறது என்று சொல்லலாம். ஜெயலலிதா காலத்தில் பவ்யம் காட்டிவந்த எடப்பாடி பழனிசாமியும் இப்படிப் பேசுவாரா என திமுகவினரே வாயில் விரலை வைக்கும் அளவுக்கு, பிளந்துகட்டத் தொடங்கியிருக்கிறார். ’ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியைப் பெற்றார்’ என திமுக தலைவர் முதல் அண்மையில் கட்சியில் சேர்ந்த இளம் பேச்சாளர்வரை பேசினாலும், ஒரு கட்டம்வரை அதற்குப் பதில் அளிக்காமல் சமாளித்தார், எடப்பாடி பழனிசாமி. ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாமல் போகவே அவரால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. விமர்சனத்தின் மீது பதிவாகும் கவனத்தைத் திருப்பிவிடும் உத்தியாக,’ஊர்ந்துபோய் பதவி வாங்கினதா சொல்றாங்க. ஊர்ந்துபோக நான் என்ன பாம்பா பல்லியா?’ என அப்பாவி பாமரனைப் போல எதிர்க் கேள்வியைப் போட்டார். திமுக தரப்பின்…

Read More

கோயம்புத்தூரில் குடியேறுகிறாரா கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதிமன்றகட்சி தலைவருமான கமல்ஹாசன், கோவையில் குடியேற திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய உறவினர்களும், நான் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் அதிகம் வசிக்கும் ( சென்னை) மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட்டிருந்தால், எனக்கு பாதுகாப்பாகவும், மிக எளிமையான கணக்காகவும் இருந்திருக்கும்.  ஆனால் அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி தான் மோசமான அரசியல்வாதிகளால் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.  அதனால் தான் அந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுமட்டுமன்றி, கோவை தெற்கு தொகுதியில் தேசிய கட்சிகளால் தூண்டப்பட்டு சமூக நல்லிணக்கம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களே அங்கு போட்டியிடவும் செய்கிறார்கள். அதனால் இது…

Read More

கொளத்தூரில் முதல்வர் எடப்பாடியில் எதிர்கட்சி தலைவர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சேலத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி தொகுதிக்குச் சென்றார். எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் சம்பத் குமாருக்கு வாக்கு சேகரித்து, சாலையில் நடந்து சென்று பிரச்சாரம் செய்தார். எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, திமுக தேர்தல் அறிக்கையை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் எடப்பாடி காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்குச் சென்றும் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் பலர்…

Read More

பாட்டுபாடி வாக்கு கேட்கும் நாம் தமிழர் சீமான்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவர் பேசுவதற்கு முன்னர், அக்கட்சியின் பெண்கள் பிரிவினர் மேடையிலேயே சூடம் கொளுத்தி ஆரத்தி எடுத்தனர். மைக்கைப் பிடித்த சீமான், நாம் தமிழரின் ஆட்சி அமைந்தால் என்னென்ன செய்வோம் என தமிழ்த் தேசியக் கொள்கைத் திட்டங்களைப் பற்றி விவரித்தார். அவரின் பேச்சிலிருந்து..! ” பாண்டியாறு புன்னம்புழா ஆறுகள் கேரளத்தின் ஆறு மாவட்டங்களை செழிக்கச்செய்கிறது. அதில் அணை கட்ட இந்திராகாந்தி அடிக்கல் நாட்டிவிட்டுப் போய்விட்டார். நாம் அந்த அணையைக் கட்டுவோம். பசியைப் போக்கணும்னு இலவச அரிசி தருது அரசாங்கம். உலக வர்த்தக அமைப்பு உணவு மானியத்தை துண்டிக்குது. இது தெரியாமல் இங்கு சில தலைவர்கள் வீடு தேடி ரேசன் அரிசி…

Read More

என் பேச்சால்முதல்வர் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் – ஆ. ராசா

சமீபத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. முதல்வரின் தாயைப் பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, சென்னையில், பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் தனது தாயைப் பற்றி இழிவுபடுத்திப் பேசுவதா என கண் கலங்கினார். முதல்வரின் தாயைப் பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டது. ராசா மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தநிலையில், அதுதற்காலிகமாகநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குகளும் பதியப்பட்டு, போலீஸ் தரப்பில் தயாராக இருந்தும், கடைசியில் நேற்று மாலையில் நோ சொல்லிவிட்டார், எடப்பாடி இந்நிலையில் தனது பேச்சு குறித்து மீண்டும் விளக்கமளித்து…

Read More