டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  & கான்சப்ட்  வீடியோ வெளியானது !!

அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும்,  யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக,  பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு  வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், தயாரிப்பாளர்…

Read More

MRP Entertainment  தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசாக,  கார் வழங்கியுள்ளார்

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment  தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்  படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார்…

Read More

AR ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!

AR ரஹ்மான், ஆதித்யா RK மற்றும் மஷூக் ரஹ்மான் இணைந்து, ஆனந்த் L ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் தமிழ் பாடல் ‘ஓ காதலே’யை வெளியிட்டுள்ளனர். ‘ஓ காதலே’ எனும் இந்த பாடல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தேரே இஷ்க் மே’ உலகத்திற்குள் முதல் பார்வையாக அமைந்துள்ளது. டீசர் வெளியான தருணத்திலேயே உருவான உற்சாகம், இப்போது முழுமையான இசை அனுபவமாக மாறியுள்ளது. ரஹ்மானின் இசை மாயையில் உருவாகியுள்ள இந்த பாடல், உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரம்மாண்டமான இசை வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் காணொளியில், AR ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை, ஆதித்யா RK-வின் தனித்துவமான குரல், மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் ஆகியவை ஓர் அபூர்வ இணைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கும் காட்சி வடிவங்கள்…

Read More

நிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் ’ஜூடோபியா 2’ நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். இந்தப் படத்தில், கேரி டி’ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய…

Read More

Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்

‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழு தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions) இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்) இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: சுரேஷ்…

Read More

கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்

கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார். ‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 7’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், “விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன்…

Read More

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்  முன்னிலையில்,  படக்குழுவினருடன்,  திரைபிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., ஆண்பாவம் என்ற  வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து,  ஆண் பாவம் பொல்லாதது எனப் படமெடுத்துள்ளார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர் விஜயன்,  இந்தப்படம் உங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் ஆனால் கடைசியில் அழ வைத்துவிடும் எனச் சொன்னார். ஒரு தயாரிப்பாளர்…

Read More

பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இன்னிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ் அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள். சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும்…

Read More

நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். இயக்குனர் அமீர் பேசுகையில், “திரும்ப திரும்ப மாரியிடம் நீங்கள் ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள்? என கேட்கிறார்கள், இந்த சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என சொல்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியக் கூடிய சாதி, அது ஏற்படுத்திய தீமைகள், கொடுமைகள் குறித்து படம் எடுத்தால், கூடாது என்பதும், கேள்வியை முன் வைப்பது அபத்தமாக இருக்கிறது. மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில்…

Read More

தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் மற்றும்  ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் Production No.1;

Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும், Production No.1 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். புகழ் பெற்ற இயக்குனர் செல்வராகவன் மற்றும் Pan-Indian நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா, முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். “I’m Super, Super, super happy that Pavish is going to…

Read More